கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை: சர்வதேச கால்பந்தில் அதிக கோல்

Spread the love


பாரே: சர்வதேச கால்பந்தில் அதிக கோலடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார் ரொனால்டோ.

கத்தாரில், அடுத்த ஆண்டு (நவ. 21 – டிச. 18) ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கவுள்ளது. இதற்கான, ஐரோப்பிய அணிகள் பங்கேற்கும் தகுதிச் சுற்று நடக்கிறது. போர்ச்சுகலில் நடந்த ‘குரூப்–ஏ’ போட்டியில் போர்ச்சுகல், அயர்லாந்து அணிகள் மோதின. இதில் அபாரமாக ஆடிய போர்ச்சுகல் அணி 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

 

போர்ச்சுகல் சார்பில் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 (89, 90+6வது நிமிடம்) கோலடித்தார். அயர்லாந்து அணிக்கு ஏகன் (45வது நிமிடம்) ஆறுதல் தந்தார். போர்ச்சுகல் அணி, இதுவரை விளையாடிய 4 போட்டியில், 3 வெற்றி, ஒரு ‘டிரா’ என, 10 புள்ளிகளுடன் ‘ஏ’ பிரிவில் முதலிடத்தில் உள்ளது.

 

ரொனால்டோ ‘நம்பர்–1’: இப்போட்டியில் அசத்திய ரொனால்டோ, தனது 111வது சர்வதேச கோல் அடித்தார். இவர், 180 போட்டியில் இந்த இலக்கை அடைந்தார். இதன்மூலம் சர்வதேச கால்பந்து அரங்கில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் ஈரான் அணியின் முன்னாள் வீரர் அலி டேயை (109 கோல், 149 போட்டி) முந்தி முதலிடம் பிடித்தார். இப்பட்டியலில் அர்ஜென்டினாவின் மெஸ்சி (76 கோல், 151 போட்டி), இந்தியாவின் சுனில் செத்ரி (74 கோல், 118 போட்டி) 8, 12வது இடத்தில் உள்ளனர்.

 

தவிர ரொனால்டோ, சர்வதேச அரங்கில் அதிக கோலடித்தவர்கள் வரிசையில் கனடா வீராங்கனை கிறிஸ்டின் சின்கிளேரை (187 கோல், 304 போட்டி) விட 76 கோல் பின்தங்கி உள்ளார். சின்க்ளேர் 38, சமீபத்தில் முடிந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் தனது 187வது கோல் அடித்திருந்தார்.

Advertisement





THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: