கிருமிப்பரவலுக்கு இடையில் தொடரும் தோக்கியோ உடற்குறையுள்ளோர் ஒலிம்பிக் போட்டிகள்

Spread the love


Images

  • paralympics 2

    Reuters

தோக்கியோ உடற்குறையுள்ளோர் ஒலிம்பிக் போட்டிகள் நாளை தொடங்கவுள்ளன.

சிங்கப்பூர் நேரப்படி இன்று இரவு எட்டு மணிக்கு, அதன் தொடக்க விழா இடம்பெறும்.

கடந்த இரண்டு வாரங்களாக தோக்கியோவில் நாள்தோறும் புதிதாக சுமார் 5,000 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்படுகிறது.

என்றாலும், திட்டமிட்டபடி பாதுகாப்பான முறையில் உடற்குறையுள்ளோர் ஒலிம்பிக் போட்டியை நடத்த முடியும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஒலிம்பிக் போட்டியின் போது பின்பற்றப்பட்ட கிருமிப்பரவல் கட்டுப்பாட்டு விதிகள் இப்போதும் கடைப்பிடிக்கப்படும் என்று ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.

பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.

வீரர்களுக்கும், மற்ற பங்கேற்பாளர்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

உடற்குறையுள்ளோர் ஒலிம்பிக் தொடர்பில் இதுவரை 138 பேருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

அவர்களில் பெரும்பாலோர் ஜப்பானில் பணியாற்றும் ஒலிம்பிக் அதிகாரிகள்.  

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: