“கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்களைப் பராமரிப்பு வசதிகளுக்கு நேரத்தோடு அனுப்பச் செயல்முறைகள் கடுமையாக்கப்படும்”

Spread the love

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள், சுகாதாரப் பராமரிப்பு வசதிகளுக்கு நேரத்தோடு அனுப்பப்படுவதை உறுதிசெய்யச் செயல்முறைகள் கடுமையாக்கப்படும் என்று ACE குழு உறுதியளித்துள்ளது.

Westlite துக்காங் (Tukang) ஊழியர் விடுதியில் COVID-19 சுகாதார விதிமீறல்கள், மருத்துவ கவனிப்பில் குறைபாடு, பொட்டல உணவின் மோசமான தரம் ஆகியவை குறித்துக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதோடு, பிரச்சினைகளைக் கையாள ஊழியர்களின் முதலாளிகளோடு இணைந்து பணிபுரிவதாக ACE குழுவின் தலைவர் திரு. துங் யீ ஃபாய் (Tung Yui Fai) கூறினார்.

சுகாதாரப் பராமரிப்பு வசதிகளுக்கு அனுப்பப்படுவதில் தாமதத்துக்கு ஆளான அனைத்து ஊழியர்களும், அங்கே அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

வெளிநாட்டு ஊழியர் விடுதியில், நடமாடும் மருத்துவக் குழுக்களும் பணியமர்த்தப்பட்டுள்ளன.

அதிகரித்துள்ள COVID-19 சம்பவங்களுக்கு இடையே, ஊழியர்களைத் தகுந்த பராமரிப்பு வசதிக்கு அனுப்பப் போதிய வளங்கள் இல்லாததால் தாமதம் ஏற்பட்டதாக, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாகத் திரு. துங் சொன்னார்.

விடுதியில் வசிக்கும் தனது ஊழியர்களுக்கு, நிறுவனம் ஒன்று, பெரும் கட்டாயப் பரிசோதனைப் பயிற்சி மேற்கொண்டபோது, கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டதாகக் கூறப்பட்டது.

Westlite Tukang ஊழியர் விடுதியில் உள்ள பெரும்பாலோர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள்.

அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிக்க, முதலாளிகளுடன் இணைந்து பணியாற்றுவதாகத் திரு. துங் கூறினார்.

தேசியத் தடுப்பூசித் திட்டத்தின்கீழ் உள்ள தடுப்பூசிகளை ஊழியர்கள் போட்டுக்கொள்ளலாம்.

அல்லது அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தடுப்பூசிகளையும் போட்டுக்கொள்ளலாம்.  

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: