கிருமித்தொற்றால் பாதிக்கப்படும் மூவரில் ஒருவருக்கு நீண்ட காலச் சுகாதாரப் பாதிப்பு ஏற்படுகிறது: ஆய்வு

Spread the love

கிருமித்தொற்றால் பாதிக்கப்படும் மூவரில் ஒருவருக்கு நீண்ட காலச் சுகாதாரப் பாதிப்பு ஏற்படுவதாக ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

அவர்களுக்கு மனநலப் பாதிப்பு, உடல் உறுப்பு சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் போன்றவை ஏற்படுவதாக Nature Medicine சஞ்சிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் போஸ்ட்டன் (Boston) நகரில் உள்ள Dana-Farber புற்றுநோய் நிலையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அவ்வாறு தெரிவித்தனர்.

ஐரோப்பா, அமெரிக்கா, சீனா ஆகிய இடங்களில் நோயாளிகளிடம் நீண்ட காலம் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளை மறுஆய்வு செய்தபோது அது தெரியவந்ததாக அவர்கள் கூறினர்.

கிருமித்தொற்றால் மோசமாகப் பாதிக்கப்பட்டோரின் நுரையீரலில் பாதிப்பு நேர்வதுண்டு.

அது, அவர்களிடையே நீண்ட-கால சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகவும், நோயாளிகள் சிலருக்கு உடல் உறுப்புகளில் பாதிப்பு ஏற்படுவதாகவும் கூறப்பட்டது.

அதனால், இருதய நோய்களும், நாள்பட்ட வீக்கமும் ஏற்படுகின்றன.

சுமார் 30 விழுக்காட்டு நோயாளிடம் சோர்வு, மூச்சு திணறல், மனநலப் பாதிப்பு போன்ற அறிகுறிகள் காணப்பட்டதாக ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டது.

நோயாளிகளில் பாதிப் பேருக்கு, கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்து 2 மாதங்களில் பல்வேறு அறிகுறிகள் ஏற்படுகின்றன.

கிருமித்தொற்றால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏற்படும் நீண்ட காலப் பாதிப்பு பற்றி இனிமேல் தான் தெரியும் என்றும் அது குறித்து விரிவான ஆய்வுகள் தேவை என்றும் ஆய்வாளர்கள் கூறினர்.

நீண்ட காலம் நீடிக்கும் அறிகுறிகளைக் கொண்டிருப்போருக்கு சிகிச்சையளிக்கும் மருந்தகங்கள் விரிவுபடுத்தப்பட வேண்டுமென்றும் அவர்கள் கோரியுள்ளனர்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *