கிருமிகளுக்கு எதிராகத் தடுப்பூசிகளைத் தயாரிக்கப் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவிருக்கும் Pfizer நிறுவனம்

Spread the love


Pfizer மருந்து தயாரிப்பு நிறுவனம் கிருமிகளுக்கு எதிராகப் புதிய தடுப்பூசிகளைத் தயாரிக்க RNA தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

மருந்துத் தயாரிப்பு குறித்து அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அல்பர்ட் போர்லா (Albert Bourla) கூறியதாக Wall Street Journal குறிப்பிட்டுள்ளது.

COVID-19 நோய்த்தொற்றுக்கு எதிராக தடுப்பூசியைக் கண்டுபிடிக்க Pfizer நிறுவனம் RNA தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது

தற்போது Pfizer நிறுவனம் எந்தக் கிருமிக்கு எதிராகப் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது என்பது பற்றிய தகவலை அது வெளியிடவில்லை.

அது குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் கேட்டதற்கு Pfizer உடனடியாகப் பதில் தரவில்லை.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *