கிரிக்கெட்: உலகக் கிண்ணத்தை முதன்முறையாக வென்றது இங்கிலாந்து

Spread the love


உலகக் கிண்ணக் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் நியூஸிலந்தைத் தோற்கடித்து முதன்முறையாக வெற்றி பெற்றுள்ளது இங்கிலாந்து.

நியூஸிலந்தும் இதற்கு முன்னர் உலகக் கிண்ணத்தை வென்றதில்லை.

இரண்டு முறை, ஆட்டம் சம நிலையில் முடியவே, ஆட்ட விதிமுறையின்படி இங்கிலாந்து வென்றதாக அறிவிக்கப்பட்டது.

முதலில் பந்தடித்த நியூஸிலந்து 50 ஓவரில், 8 விக்கெட் இழப்புக்கு 241 ஓட்டம் எடுத்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து, ஆட்டத்தின் இறுதிப் பந்தில் இறுதி விக்கெட்டை இழந்தது. அதுவும் 241 ஓட்டமே எடுத்தது.

‘சூப்பர் ஓவர்’ முறைக்குச் சென்றது ஆட்டம். அதிலும் இரு தரப்பும் 15 ஓட்டத்தை எடுத்து சமநிலையில் முடித்தன.

பின்னர் ஒட்டுமொத்த ஆட்டத்தில் எந்த அணி அதிக பவுண்டரிகளும் சிக்ஸர்களும் அடித்ததோ அந்த அணியே வெற்றி எனும் விதிமுறையின்படி, இங்கிலாந்து வென்றதாக அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து 26 பவுண்டரிகளும் சிக்ஸர்களும் அடித்திருந்தது. நியூஸிலந்து அடித்ததோ 17.

உலகக் கிண்ணக் கிரிக்கெட் வரலாற்றில் இதற்கு முன்னர் இறுதியாட்டம் இந்த அளவு விறுவிறுப்பாகவும் இழுபறியாகவும் இருந்ததில்லை.  

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *