Spread the love
மயாமி ஓபன் டென்னிஸ் காலிறுதிக்கு ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி, ஜப்பானின் ஒசாகா முன்னேறினர். அமெரிக்காவில், மயாமி ஓபன் டென்னிஸ் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் உலகின் ‘நம்பர்–1’ ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி, பெலாரசின் விக்டோரியா அசரன்கா மோதினர். முதல் செட்டை 6–1 எனக் கைப்பற்றிய ஆஷ்லே, 2வது செட்டை 1–6 என இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் எழுச்சி கண்ட இவர், 6–2 என தன்வசப்படுத்தினார். முடிவில் ஆஷ்லே பார்டி 6–1, 1–6, 6–2 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.
THANK YOU