காற்பந்து வீரர் நெய்மார் மீது பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டு சுமத்திய பெண் தொலைக்காட்சியில் பேட்டி

Spread the love


(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

பிரேசில் காற்பந்து வீரர் நெய்மார் பாலியல் பலாத்காரம் செய்தார் என்று குற்றஞ்சாட்டிய பெண், சம்பவம் தொடர்பாகத் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ளார்.

பேட்டியின் சில காட்சிகள் நேற்றுத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன.

பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்தப் பெண் முன்வைத்த குற்றச்சாட்டை நெய்மார் மறுத்துள்ளார்.

தம்மிடமிருந்து பெரும் பணத்தைப் பெறுவதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஒரு மோசடி என்று அவர் குறிப்பிட்டார்.

தொலைக்காட்சிப் பேட்டியின் முழுவடிவம், வரும் திங்கட்கிழமை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 நெய்மார் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு விளையாட்டுத் துறையில் அவரின் வருங்காலத்தைப் பாதிக்கலாம் என்று அவரின் ரசிகர்கள் வருத்தம் தெரிவித்திருக்கின்றனர்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *