காற்பந்தாட்டப் போட்டிகள் கள்ளத்தனமாக இணையம்வழி ஒளிபரப்பப்படுவதைத் தடுக்க இயக்கம்

Spread the love

பிரிமியர் லீக், காற்பந்தாட்டப் போட்டிகள் கள்ளத்தனமாக இணையம்வழி சிங்கப்பூரில் ஒளிபரப்பப்படுவதைத் தடுக்க “Boot Out Piracy” எனும் இயக்கத்தைத் தொடங்கியுள்ளது.

காற்பந்து ரசிகர்கள் எதிர்நோக்கும் அபாயம் பற்றியும் அது எச்சரிக்கிறது.

சிங்கப்பூரில் வசிக்கும் 1,000 பேரிடம் கடந்த ஏப்ரலில் கருத்தாய்வு நடத்தப்பட்டது.

அவர்களில் மூன்றில் ஒரு பங்கினர், கள்ள ஒளிபரப்புகளைப் பார்ப்பதால் ஏற்படும் அபாயத்தை உணரவில்லை.

அடையாளத் திருட்டு, இணைய ஊடுருவல் போன்ற குற்றங்கள் நேர்வதைத் தடுக்க “Boot Out Piracy” இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

மின்னிலக்கத் தளங்களில் அதுபற்றிய விவரங்களைப் பரப்புவதில் காற்பந்து முன்னணி வீரர்கள் சிலர் இணைந்துள்ளனர்.

கள்ள ஒளிபரப்புகளின் தரம் குறைவு என்பது மட்டுமல்ல,
இடையிடையே அடிக்கடி விளம்பரங்களும் வந்துபோகும்.

அவற்றில் தீங்கு விளைவிக்கும் மென்பொருள் மறைந்திருக்கலாம்.

அவை, பாதுகாப்பற்றதாகவும், இணைய மோசடிகள் நேரும் சாத்தியத்தை அதிகரிக்கக்கூடியவையாகவும் இருக்க வாய்ப்பு உண்டு.

காற்பந்து ரசிகர்கள், அத்தகைய இணையத்தளங்களைத் தவிர்ப்பதற்கு உதவும் நோக்கில் அதிகாரிகளுடன் பிரிமியர் லீக் இணைந்து செயல்படுகிறது.

வரும் வெள்ளிக்கிழமை, பிரிமியர் லீக்கின் அடுத்த பருவம் தொடங்கவிருக்கும் நிலையில், “Boot Out Piracy” இயக்கம் அறிமுகம் கண்டுள்ளது.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: