கார் நிறைய KFC உணவுடன் ஆக்லந்து நகருக்குள் நுழைய முயன்ற இருவர் கைது

Spread the love


நியூஸிலந்தின் ஆக்லந்து (Auckland) நகருக்குள் காரின் பின்புறம் நிறைய KFC உணவுடன் நுழைய முயன்ற இருவரைக் காவல்துறை கைது செய்துள்ளது.

அவர்களிடம் சுமார் 100,000 டாலர் ரொக்கமும் இருந்ததாக The Guardian செய்தி நிறுவனம் கூறியது.

இருவரும் ஆக்லந்து எல்லைக்கு அருகே, காவல்துறை அதிகாரிகளிடமிருந்து தப்ப முயன்றதாகக் கூறப்படுகிறது.

காரைச் சோதித்தபோது, உணவும் ரொக்கமும் கண்டுபிடிக்கப்பட்டது.

சுமார் ஒரு மாதமாக, ஆக்லந்து கடுமையான முடக்கநிலையில் உள்ளது.

அங்கு உணவகங்களைத் திறக்கவோ உணவுப் பொருள்களை விநியோகிக்கவோ அனுமதி கிடையாது.

அத்தகைய சூழலில், விரைவு உணவு மதிப்புமிக்க ஒன்றாகலாம் என்றது The Guardian.

சென்ற வாரம், McDonald’s உணவகத்தைத் தேடி ஆக்லந்து எல்லையைக் கடந்ததாக ஓர் ஆடவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

பிடிபட்ட இருவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 6 மாத சிறைத் தண்டனையோ 4,000 டாலர் வரை அபராதமோ விதிக்கப்படலாம். 

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: