கார்ப் பந்தய வீரர் ஷூமாக்கரின் கார் மீண்டும் பந்தயச் சாலையில்

Spread the loveImages

  • Mik

    படம்: REUTERS

கார் பந்தயப் போட்டிகளின் முடிசூடா மன்னனாகக் கருதப்படும் மைக்கல் ஷூமாக்கரின் ஃபெராரி கார் மீண்டும் பந்தயச் சாலையில் வலம் வரவிருக்கிறது.

ஷூமாக்கர் 2004 ஆம் ஆண்டுப் பந்தயங்களில் பயன்படுத்திய ஃபெராரி காரை அவர் மகன் மிக் ஷூமாக்கர் ஜெர்மனியில் அடுத்த மாதம் ஓட்டவுள்ளார்.

ஜூலை 27ஆம் தேதி ஜெர்மனியில் நடக்கவுள்ள தகுதிப் பந்தயத்திற்கு முன்பாக மிக் அவரது தந்தையின் காரை ஓட்டுவார் என்று தெரிவிக்கப்பட்டது.

தற்போது மிக், ஃபெராரி அமைப்பின்கீழ் கார்ப் பந்தயங்களின் இரண்டாம் நிலைப்போட்டிகளில் கலந்துவருகிறார்.

50 வயது மைக்கல் ஷூமாக்கர், 7 முறை Formula One கிண்ணத்தை வென்றவர். மொத்தம் 91 பந்தயங்களையும் அவர் வென்றுள்ளார்.

5 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் பனிச்சறுக்கு விளையாடியபோது விபத்து ஏற்பட்டது. அதில் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு செயலிழந்த நிலைக்கு ஆளானார்.

THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *