காணொளி, நிழற்படங்களின் நம்பத்தன்மையைச் சோதிக்கவிருக்கும் Facebook

Spread the loveImages

  • facebook (2)

    படம்: Pixabay 

Facebook சமூகத் தளத்தில் பகிரப்படும் பொய்த் தகவல்களை முறியடிக்க, அந்நிறுவனம் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.

அதன் பொருட்டு பதிவேற்றப்படும் காணொளி, நிழற்படங்களின் நம்பகத்தன்மையை Facebook சோதிக்கவுள்ளது. பிரான்ஸில் அது முதலில் சோதிக்கப்படும்.

காணொளி, நிழற்படங்கள் மூலம் பொய்த் தகவல்கள் Facebook சமூகத் தளத்தில் பரப்பப்படுகின்றன.

அதன் மூலம் சில தீய குழுக்கள் பல்வேறு நாடுகளில் நியாயமற்ற அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முயல்வதாகத் தெரிவிக்கப்பட்டது.

சர்ச்சைக்குரிய படங்களும், காணொளிகளும் அவற்றின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் குழுக்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, படங்கள் உண்மையானவையா பொய்யானவையா என்பதைக் குழுவிலுள்ள நிபுணர்கள் கண்டுபிடிப்பர்.

THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *