கல்வி கட்டணம் குறைக்க கோரி| Dinamalar

Spread the love


சென்னை:கல்விக் கட்டணத்தை குறைக்கக் கோரி, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி மாணவர்கள், மருத்துவ கல்வி இயக்ககத்தை முற்றுகையிட்டு, உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலையின் கீழ் இருந்த, ராஜா முத்தையா மருத்துவ கல்லுாரி மற்றும் பல் மருத்துவ கல்லுாரியை, தமிழக அரசு ஏற்றது. கல்வி கட்டணமும் குறைத்து வசூலிக்கப்படும் என, அரசாணை வெளியிடப்பட்டது.

இந்நிலையில், பழைய கட்டணமே வசூலிக்கப்படுவதாக கூறி, ராஜா முத்தையா மருத்துவ கல்லுாரி மாணவர்கள், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள, மருத்துவ கல்வி இயக்குனரகத்தை முற்றுகை யிட்டு, நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

இது குறித்து, மாணவர்கள் கூறியதாவது:இந்தாண்டு பிப்., 1 முதல், தமிழக மருத்துவ கல்வி இயக்குனரகத்தின் கீழ், ராஜா முத்தையா மருத்துவ கல்லுாரி சென்றது. அதன்படி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை தான் தேர்வை நடத்த வேண்டும். ஆனால், அண்ணாமலை பல்கலை தேர்வை நடத்தும் என, அறிவிக்கப்பட்டது.

மேலும், நிர்வாகத்தின் கட்டணத்தை கட்ட வேண்டும் என, வலியுறுத்துகின்றனர். இதனால், இறுதிஆண்டு படித்து முடித்த மாணவர்கள், சான்றிதழ் பெற முடியாது; படித்து வரும் மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலையும் உருவாகி உள்ளது. எனவே, அரசு வெளியிட்ட அரசாணையை அமல்படுத்துவதுடன், தேர்வை, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

AdvertisementTHANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *