கபில்தேவ், தோனி, கோலி… லார்ட்ஸை வென்ற இந்திய கேப்டன்களும், வெற்றிக் கதைகளும்! | Remarkable Test Victories of Indian Captains in the Lord’s Cricket Ground

Spread the love


கடைசி நாளில், ‘முடிந்தது கதை’ என முற்றுப் புள்ளி வைக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலை. இக்கட்டில் இருந்து மீட்டெடுக்க எந்த சூப்பர் ஹீரோவும் வரவில்லை. உண்மையில், இப்படிப்பட்ட கடினமான சந்தர்ப்பங்கள்தான், சூப்பர் ஹீரோக்களை உருவாக்குகின்றன. அப்படிக் கிடைத்த அந்த இரு ஆதர்ச நாயகர்கள் தான் ஷமியும், பும்ராவும்.

எதிரியின் குதிரையிலேயே சவாரி செய்து, அவர்களையே நமக்கு, ஜாக்கியாக மாற்றி, வெற்றிக் கோட்டைத் தொட்டால் எப்படி இருக்கும்? அப்படி இருந்தது, பும்ரா – ஷமியின் எதிர்பாராத எழுச்சி! இதற்குப் பின்பாக, அவர்களது அற்புதமான ஸ்பெல்கள், சிராஜின் தனி ராஜ்யம் என போட்டியில், ஐந்து நாட்களிலும், பலவித செக், செக் மேட்டுகள் என நிகழ்ந்து கொண்டே இருந்தன.

உண்மையில், பத்து ஓவர்களுக்கு உள்ளாகத்தான் உள்ளதென்ற நிலையில், மூன்று விக்கெட்டுகள் எல்லாம் சாத்தியமே இல்லை. ‘பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்’ என தன்னைத் தானே இந்திய ரசிகன் தேற்றிக் கொள்ளக் கூடத் தயாராகி விட்டான். ஆனால், இந்திய வீரர்கள், அப்படி ஒரு சமாதான உடன்படிக்கைக்குத் தயாராகவில்லை. ஒரு சில ஓவர்களிலேயே, மாயாஜாலம் செய்து, நம்ப முடியாததை நிகழ்த்தி, நமது ஒட்டு மொத்த செல்களையும் புல்லரிக்க வைத்து, கண்களை வேர்க்க வைத்து விட்டனர்.

ENG v IND | லார்ட்ஸ் டெஸ்ட்

ENG v IND | லார்ட்ஸ் டெஸ்ட்
twitter.com/BCCI

தனது உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இங்கிலாந்து தோற்றது என்று சொன்னாலும், இந்தியாவை வெல்ல வைத்தது, அதே உணர்வுகள்தான். இதற்கு கே.எல் ராகுல், சொன்ன கருத்தே சான்று. உணர்வுகளுக்கான வடிகால், எதுவாக இருக்கிறது என்பது எல்லாவற்றையும் முடிவு செய்யும். அது பழியைத் தீர்க்கும் வஞ்சமெனில், விளைவு நமக்கே பாதகமாகும், சரியான வகையில் வழிநடத்தினால், அதுவே வெற்றிக்கு இட்டுச் செல்லும்.

ஆகச்சிறந்த பழிவாங்குதல், ஒரு இணையற்ற வெற்றிதானே?! இதைத்தான் செய்து காட்டியது இந்திய அணி. மூன்றாவது முறையாகவும், பௌலர்களால், ஒரு வெற்றி சாத்தியமாயிற்று.

THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: