கன்னியாஸ்திரிகளை ரயிலில் இருந்து இறக்கிய போலீஸ் – என்ன நடந்தது?

Spread the love


  • சமீராத்மஜ் மிஷ்ரா
  • பிபிசி இந்தி

KERALA

பட மூலாதாரம், TWITTER

உத்தர பிரதேசத்தின் ஜான்சியில் கேரளாவைச் சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகளுக்கு தொல்லை கொடுக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம், தொடர்ந்து சூடுபிடித்து வருகிறது.

இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இது தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததும், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியதும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து வெளியிட்டிருப்பதும்,இந்த விவகாரம் அரசியல் மட்டத்தை எட்டியுள்ளதை உணர்த்துகிறது.

இந்த சம்பவத்தை காரணமாக வைத்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஆர்.எஸ்.எஸ்-ஐ இலக்கு வைத்து பிரச்னை எழுப்பி வருகிறார்.

“உத்தர பிரதேசத்தில் கேரள கன்னியாஸ்திரிகள் மோசமாக நடத்தப்பட்ட விதம், சிறுபான்மையினரை நசுக்கும் பொருட்டு, ஒரு மதத்தை மற்றொரு மதத்துடன் சண்டையிட வைக்கும் சங் பரிவாரின் விஷம பிரசாரத்தின் விளைவு,” என்று ராகுல் ட்வீட் செய்துள்ளார்.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *