கனவுகள் வித் கண்டிஷன்ஸ் அப்ளை… ஒலிம்பிக் சொல்லும் உண்மை என்ன?! | Unknown Socio economical angle of Indian Olympians

Spread the love


பொருளாதாரம் மட்டுமல்ல, சமூக பின்னணிகளும் ஒரு வீரரின் கனவை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. அதிகம் அறியப்படாத குதிரையேற்ற போட்டி இன்றைக்கும் கௌரவத்துடன் சம்பந்தப்பட்ட போட்டியாகவே பார்க்கப்படுகிறது.

கிராம – நகர வேறுபாடுகள் இன்னும் அதிக தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. உள்ளரங்க விளையாட்டுகளில் கோலோச்சுபவர்களின் பின்னணியை தேடிப்பார்த்தால், பெரும்பாலும் நகரத்தை சேர்ந்த உயர் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். அந்த நகர நடுத்தர பெற்றோர்களுக்கு தங்களின் பிள்ளைகள் ஏதோ ஒரு விளையாட்டில் ஈடுபட வேண்டும் என்கிற ஆர்வமும் இருக்கிறது. அதேநேரத்தில், தங்களுடைய பிள்ளைகள் அதிகம் வருந்திக் கொள்ளாமல் மிகவும் பாதுகாப்பான சூழலில் இருக்க வேண்டும் எனவும் விரும்புகின்றனர். அதனாலயே உள்ளரங்க விளையாட்டுகளில் ஊரிலேயே சிறந்த பயிற்சி மையத்தை தேடிப்பிடித்து தங்களின் பிள்ளைகளை சேர்த்து விடுகின்றனர்.

கோல்ஃப் விளையாட்டு

கோல்ஃப் விளையாட்டு

ஒரு வகையில் நடுத்தர வர்கத்தின் மினிமம் கியாரன்ட்டி மனநிலையின் வெளிப்பாடே இது. ஒருவேளை பிள்ளைகள் பெரியளவில் ஜெயித்தால் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். இல்லையென்றாலும் தங்களின் பிள்ளைகள் உடல்ரீதியாக பெரிதாக வருந்தியிருக்கமாட்டார்கள் என எண்ணுகிறார்கள். இந்த கூட்டல் கழித்தல் கணக்கு வழக்குகளையெல்லாம் கிராமம் அல்லது சிறுநகரத்தை சேர்ந்த பெற்றோர்களிடம் எதிர்பார்க்கவே முடியாது.

இங்கே இந்தியாவில் ஏழைகளுக்கும் பின் தங்கியவர்களுக்கும் என ஒரு குறிப்பிட்ட விளையாட்டுகள் இருக்கின்றன. பணக்காரர்கள், நகரவாசிகள், மேட்டுக்குடியினர் போன்றோருக்கென குறிப்பிட்ட விளையாட்டுகள் இருக்கின்றன.

ஒரு சாரார் இன்னொரு எதிர்நிலையில் இருக்கும் விளையாட்டுக்குள் நுழைவதோ சாதிப்பதோ விதிவிலக்குகளாக அங்கொன்றும் இங்கொன்றுமாகவே நடந்து கொண்டிருக்கிறது.

பெருமுதலாளிகளுக்கும் பணக்காரர்களுக்கும் – ஏழை நடுத்தர வர்க்கத்தினருக்கும் இடையே இருக்கும் அதிபயங்கர வேறுபாடுகளும், இன்னமும் சமநிலையை அடையாமல் இருக்கும் சமூக பின்னணிகளுமே இதற்கு ஒரு காரணமாக இருக்கிறது.

மீண்டும் மீண்டும் ஒரே ஒரு உண்மைதான் முகத்தில் அறைகிறது. இங்கே நீங்கள் கனவு காணலாம்… ஆனால், உங்களுடைய சமூக பொருளாதார பின்னணிக்கு ஏற்ற கனவைத்தான் காண முடியும்.THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: