கட்டுமானத் திட்டங்களை விரைவான, பாதுகாப்பான முறையில் கையாள உதவும் மின்னிலக்கத் தளம்

Spread the love


சிங்கப்பூரில் கட்டுமானத் திட்டங்களை விரைவான, பாதுகாப்பான முறையில் கையாள, கடந்த 9 மாதங்களாக, 1,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், The Hubble Platform எனும் புதிய மின்னிலக்கத் தளத்தைப் பயன்படுத்தி வருகின்றன.

அதன் மூலம் பிரச்சினைகளைக் கண்டறிந்து, திட்ட வரைபடங்களுக்கு ஒப்புதல் வழங்கி, ஏற்கனவே தயாரிக்கப்பட்ட கட்டுமான பாகங்களை விநியோகம் செய்வதைக் கண்காணிக்க முடியும்.

கட்டட வடிவமைப்பாளர்கள், கட்டுக் குத்தகையாளர்கள் போன்றவர்களுடன் கட்டுமான நிறுவனங்கள் எளிதாகத் தொடர்பு கொள்ள அந்த ஒரே இணையவாசல் வழிவகுக்கும்.

கட்டுமானத் தளத்தில் ஊழியர்களுக்குப் பாதுகாப்புத் தகவல்களை வழங்கி, நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்தவும் அது உதவுகிறது.

The Hubble Platform தொழில்நுட்பத் தளத்துக்கு ஒரு மாதத்திற்குச் சுமார் 2,000 வெள்ளி கட்டணம் செலுத்தவேண்டும்.

ஆனால் தகவல், தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் அந்தத் தொகையில் 80 விழுக்காடு வரை உதவி வழங்குகிறது. 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *