கட்டட, கட்டுமான ஆணையத்திற்குப் புதிய தலைவர், துணைத் தலைவர் நியமனம்

Spread the love


Images

  • Bca

    படம்: MND, BCA

கட்டட, கட்டுமான ஆணையத்திற்குப் புதிய தலைவரும் துணைத் தலைவரும் நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய வளர்ச்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆணையத்தின் தலைவராக திரு லிம் சிம் செங் பொறுப்பேற்கிறார்.

DBS வங்கியின் மூத்த அதிகாரியான திரு. லிம், ஆணையத்தின் இயக்குநர் வாரியத்தில் உறுப்பினராக இருந்து வந்தார்.

வாரியத்தின் மற்றோர் உறுப்பினரான சிங்கப்பூர்த் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தலைவர் பேராசிரியர் டான் தியாம் சூன் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்டட, கட்டுமான ஆணையத்தின் இயக்குநர் வாரியத்தில் புதிதாக 5 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் லீ பீ வாவும் (Lee Bee Wah) ஒருவர்.

புதிதாக பொறுப்பேற்றவர்கள் அடுத்த
இரண்டு ஆண்டுகளுக்குப் பணியாற்றுவர் என்று அமைச்சு தெரிவித்தது.  

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *