கடைசி நாளில் வீழ்ந்தது விண்டீஸ்: டெஸ்ட் தொடர் சமன்

Spread the love


கிங்ஸ்டன்: விண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்டில் பாகிஸ்தான் அணி 109 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து தொடர் 1–1 என, சமனில் முடிந்தது.

வெஸ்ட் இண்டீஸ் சென்ற பாகிஸ்தான் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்டில் விண்டீஸ் வென்றது. இரண்டாவது டெஸ்ட் கிங்ஸ்டனில் நடந்தது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 302/9 (‘டிக்ளேர்’), விண்டீஸ் 150 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்கு 176 ரன் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. பின், 329 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய விண்டீஸ் அணி, 4ம் நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 49 ரன் எடுத்திருந்தது. பிராத்வைட் (17), ஜோசப் (8) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஐந்தாம் நாள் ஆட்டத்தில் 2வது இன்னிங்சை தொடர்ந்த விண்டீஸ் அணிக்கு கேப்டன் கிரெய்க் பிராத்வைட் (39), அல்சாரி ஜோசப் (17) ஏமாற்றினர். ஜேசன் ஹோல்டர் (47), கைல் மேயர்ஸ் (32), ஜெர்மைன் பிளாக்வுட் (25) ஆறுதல் தந்தனர்.

இரண்டாவது இன்னிங்சில் விண்டீஸ் அணி 219 ரன்னுக்கு சுருண்டு, தோல்வியடைந்தது. பாகிஸ்தான் சார்பில் 4 விக்கெட் கைப்பற்றிய ஷஹீன் ஷா அப்ரிதி ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதை வென்றார்.

 

மிஸ்பாவுக்கு கொரோனா

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக். ‘டுவென்டி–20’, டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இவருக்கு, கொரோனா உறுதியானது. இதனால் அங்கு 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மற்றவர்கள் தாயகம் திரும்பினர்.

Advertisement





THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: