கடுப்பேற்றிய ஜார்வோ…பட்டையை கிளப்பிய உமேஷ்..மீட்பரான போப் | England took lead in first innings and India bouncing back in second innings

Spread the love


உமேஷ் யாதவ்

உமேஷ் யாதவ்
Kirsty Wigglesworth

இந்நிலையில் நேற்றைய நாளின் தொடக்கத்திலேயே நைட் வாட்ச்மேனாக வந்திருந்த ஓவர்டன்னை வீழ்த்தி பாசிட்டிவ்வாக தொடங்கினார். டாப் ஆர்டரை சீக்கிரம் வீழ்த்தியிருந்தாலும் மலான் க்ரீஸில் நின்றது மட்டும் இந்தியாவுக்கு உறுத்தலாகவே இருந்தது. ஆனால், அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதற்குள்ளாகவே உமேஷ் யாதவ் அவரை காலி செய்துவிட்டார். ஓவர் தி விக்கெட், ரவுண்ட் தி விக்கெட் என மாறி மாறி வந்து லைனை மாற்றி மாற்றி வீசினார். ரவுண்ட் தி விக்கெட்டில் வந்து இன்கம்மிங் டெலிவரியாக வீசிய ஒரு பந்துக்கு அரைகுறையாக பேட்டை விட்டு ஸ்லிப்பில் கேட்ச் ஆகி 31 ரன்னில் வெளியேறினார். இங்கிலாந்தை ஓரளவுக்கு கட்டுப்படுத்தியதற்கு ஜோ ரூட், மலான் இருவரின் விக்கெட்டையும் உமேஷ் யாதவ் சீக்கிரம் வீழ்த்தி கொடுத்ததே காரணமாக இருந்தது.

மீட்பர் போப்!

மலான் அவுட் ஆன போது இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 62-5 இந்திய அணியை விட பரிதாபமான நிலை. அதனால் எப்படியும் இங்கிலாந்தை ஒரு 120 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆக்கி இந்தியா முதல் இன்னிங்ஸிலேயே லீட் எடுத்துவிடும் என தோன்றியது. ஆனால், இங்கிலாந்து அணியின் மீட்பராக உருவெடுத்த ஓலி போப் ஆட்டத்தை மாற்றினார்.போப் ஒரு எண்ட்டில் பொறுமையாக அவசரப்படாமல் நின்று ஏதுவான பந்துகளை மட்டும் தொட்டு ஆட, இன்னொரு எண்ட்டில் பேர்ஸ்ட்டோவும், மொயின் அலியும் அடுத்தடுத்து வந்து கொஞ்சம் வேகமாக பவுண்டரிகளை அடித்து ரன் கணக்கை உயர்த்தினர்.

அதிரடிக்காரன் வோக்ஸ்!

போப் உருவாக்கி கொடுத்த லீடை இன்னும் அதிகமாக்கி இங்கிலாந்தின் கையை ஓங்க செய்திருந்தார் கிறிஸ் வோக்ஸ். பவுண்டரிக்களால் பட்டையை கிளப்பிய அவர் அரைசதத்தை தொட்டார். 11 பவுண்டரிகளுடன் அரைசதத்தை தொட்டு அட்டகாசமாக ஆடிக்கொண்டிருந்த வோக்ஸ் துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். போப்பின் நிதான ஆட்டம், பேர்ஸ்டோ மற்றும் மொயின் அலியின் கணிசமான பங்களிப்பு, வோக்ஸின் அதிரடி இவையெல்லாம் சேர்ந்து இங்கிலாந்து அணியை 99 ரன்கள் லீட் எடுக்க வைத்தது.THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: