கடல் பருவநிலையில் ஏற்படும் மாற்றம் குறித்து ஆராய 25 மில்லியன் வெள்ளி முதலீடு

Spread the love


Images

  • turtle

    (படம்: NParks)

சிங்கப்பூர், கடல் பருவநிலையில் ஏற்படும் மாற்றம் குறித்து ஆராய, 25 மில்லியன் வெள்ளியை முதலீடு செய்யவிருக்கிறது.

உயர்ந்து வரும் கடல் நீர்மட்டங்கள், அதிகரிக்கும் கடல் மேற்பரப்பு வெப்பநிலை ஆகிய பிரச்சினைகளைக் கையாள, அந்த முதலீடு செய்யப்படுவதாகத் தேசியப் பூங்காக் கழகம் தெரிவித்தது.

நகர்ப்புற நிலைத்தன்மையைப் பற்றி ஆராய இன்று 5 திட்டங்கள் வெளியிடப்பட்டன.

அரசாங்கத்தின் 25 பில்லியன் வெள்ளி மதிப்புள்ள RIE 2025 திட்டத்தின் ஓர் அங்கமாக அவை அமைந்துள்ளன.

அடுத்த ஐந்தாண்டுகளில் ஆராய்ச்சிகளை வழிநடத்த அந்த RIE 2025 திட்டம் வகைசெய்யும்.

ஆய்வு மேம்பாட்டு முயற்சிகள், பொருளியலை வலுப்படுத்துவதோடு, சிங்கப்பூரை இன்னும் மீள்திறன்மிக்க நாடாக உருமாற்றும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ (Desmond Lee) கூறினார்.

கடல் பருவநிலை மாற்ற அறிவியல் திட்டத்தில் வெவ்வேறு ஆராய்ச்சிகள் அடங்கும் என்று திரு லீ கூறினார்.

திட்டத்தின் மூலம் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பது,
இயற்கை சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது ஆகிய 2 நோக்கங்களை ஒரே நேரத்தில் நிறைவேற்றலாம் என்றார் அவர்.

அரசாங்க அமைப்புகள், ஆராய்ச்சி நிலையங்கள், தொழில்துறைப் பங்காளிகள் அந்தத் திட்டத்தில் ஒருங்கிணைந்து பணியாற்றவிருக்கின்றன. 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: