கடந்த 24 மணி நேரத்தில் 1,187 இலங்கையர்கள் நாட்டுக்கு வருகை

Spread the love


கடந்த 24 மணி நேரத்துடன் முடிவடைந்த காலப்பகுதியில் வெளிநாடுகளில் இருந்து 1,187 இலங்கையர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக விமானநிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் தோஹாவைச் சேர்ந்த 189 பேரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயைச் சேர்ந்த 134 பேரும் உள்ளடங்குகின்றனர்.

இவ்வாறு வருகை தந்த அனைவரும், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக சுற்றுலா ஹோட்டல்களுக்கு இராணுவத்தினரினால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை கடந்த 24 மணிநேரத்தில், 21 விமானங்களில் 1,101 பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகளுக்கு புறப்பட்டு சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதில் சவுதி அரேபியா- ரியாத்துக்கு செல்லும் 255 பேரும் இந்தியா- சென்னைக்கு செல்லும்170 பேரும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *