கங்குலியை எச்சரித்த இங்கிலாந்து நிர்வாகம்… ஐந்தாவது டெஸ்ட் போட்டி கொரோனா பரவலால் நிறுத்திவைப்பு!| fifth test against india england pushed back due to corona concerns

Spread the love

கொரோனா அச்சம் காரணமாக இன்னும் சற்று நேரத்தில் மான்செஸ்டரில் தொடங்குவதாக இருந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டி நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது.

இதற்கிடையே இந்திய முகாமுக்குள் கொரோனா பரவியது, மான்செஸ்டர் டெஸ்ட்டை நிறுத்திவிட்டு ஐபிஎல் போட்டிகளுக்கு முன்னுரிமை கொடுத்தது என பல விவகாரங்கள் தொடர்பாக பிசிசிஐ தலைவர் கங்குலியிடம் கேள்வி எழுப்பி இருக்கிறது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.

இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உள்பட மூவருக்கு ஏற்கெனவே கொரோனா தொற்று பரவியதால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று இந்திய அணியின் ஜூனியர் பிசியோதெரப்பிஸ்ட் யோகேஷ் பார்மருக்கு கோரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால் இந்திய அணி வீரர்கள் அனைவரையும் நேற்று தங்கள் ஹோட்டல் அறைகளுக்குள் தனிமைப்படுத்திக்கொள்ளச் சொல்லி உத்தரவிடப்பட்டது. இதனால் இன்றைய போட்டி நடக்குமா, நடக்காதா என்கிற சந்தேகம் நேற்று எழுந்தது.

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்

ஐபிஎல்-க்கு முக்கியத்துவம் கொடுத்த பிசிசிஐ!

இன்னும் எட்டு நாட்களில் ஐபிஎல் போட்டிகள் துபாயில் ஆரம்பிக்கும் நிலையில் மான்செஸ்ட்டர் போட்டி மூலம் இந்திய வீரர்கள் பலருக்கும் கொரோனா பரவினால் அது ஐபிஎல் போட்டிகளை பாதிக்கும் என பிசிசிஐ தங்களது கவலையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்திருக்கிறது.

இரு நாடுகளுக்கு இடையேயான தொடரைவிட ஐபிஎல்-க்கு பிசிசிஐ நிர்வாகம் முக்கியத்துவம் தருவது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் ‘’ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடக்கவில்லையென்றால் எங்களுக்கு ஏற்படும் வருமான இழப்பான 304 கோடி ரூபாயை பிசிசிஐ தரவேண்டும். அத்தோடு ஐந்தாவது டெஸ்ட்டில் இருந்து வாக் ஓவர் கொடுத்ததாக அறிவித்து தொடர் 2-2 என சமநிலையில் முடிந்ததாக ஏற்றுக்கொள்ளவேண்டும்’’ என சொல்லியிருக்கிறது ECB (இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்).

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: