ஓட்டப்பந்தயத்தின்போது கீழே விழுந்த போட்டியாளரைத் தூக்கிக் கொண்டு ஓடிய வீரர் – பாராட்டும் மக்கள்

Spread the love


Images

  • IAAF

    படம்: IAAF

கத்தாரில் நடைபெற்ற உலகத் திடல்தடப் போட்டிகளின் 5,000 மீட்டர் ஓட்டத்தில் கினிபிஸ்ஸாவ் நாட்டைச் சேர்ந்த பிரைமா சுன்கர் டாபோவின் (Braima Suncar Dabo) மனம் நெகிழ வைக்கும் செயல் உலக மக்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

பிரைமாவின் சக போட்டியாளரும், வைரியுமான ஜோனத்தன் பஸ்பை போட்டியின் போது வெப்பநிலை காரணமாக சோர்ந்து தடுமாறிக் கீழே விழுந்தார்.

பஸ்பை கீழே விழுவதைக் கண்ட பிரைமா, சற்றும் யோசிக்காமல் பஸ்பையைத் தம்முடன் தூக்கிக் கொண்டு வெற்றிக்கோட்டை அடைந்தார்.

பிரைமாவின் செயலைப் பார்த்து விளையாட்டு அரங்கத்தில் இருந்த பார்வையாளர்கள் கரகோஷம் எழுப்பி பாராட்டுகள் தெரிவித்தனர்.

அந்தக் காணொளி தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டுவருகிறது.  இதுவரை 1.4 மில்லியன் பேர் Twitter-இல் அதைப் பார்த்துள்ளனர்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: