ஒலிம்பிக்சில் சிங்கப்பூர்: சுதந்திர சிங்கப்பூரின் முதல் குத்துச்சண்டை வீரரும், ஒரே குத்துச்சண்டை வீரரும் இவரே

Spread the love


Images

  • Syed Abdul Kadir

    (படம்: SNOC)

சிங்கப்பூர் சுதந்திரம் பெற்ற பிறகு ஒலிம்பிக் போட்டிகளில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்த முதல் குத்துச்சண்டை (boxer) வீரர், ஒரே குத்துச்சண்டை வீரர் சையத் அப்துல் காதிர் (Syed Abdul Kadir).

சிங்கப்பூர் பொதுவிருதுப் (Singapore Open) போட்டிகளை 4 முறை வென்ற அவர், ஒலிம்பிக்சில் light flyweight எனும் பிரிவில் பதக்கம் வெல்லும் நம்பிக்கையைக் கொண்டிருந்தார்.

அவர் 1972 மியூனிக் (Munich) ஒலிம்பிக் விளையாட்டுகளில் மூன்றாம் சுற்று வரை சென்றார்.

முதல் சுற்றில் இத்தாலியப் போட்டியாளரைத் தோற்கடித்தார்.

ஆனால் புருவத்தில் ஏற்பட்ட காயத்தால், அவரால் மூன்றாவது சுற்றுக்குப் பிறகு முன்னேறிச் செல்ல முடியவில்லை.

காதிர் 1974ஆம் ஆண்டு, காமன்வெல்த் (Commonwealth) விளையாட்டுகளில், சிங்கப்பூருக்குக் குத்துச்சண்டையில் முதல் பதக்கத்தை வென்றார்.

விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு,
அவர் தேசிய அணிக்கு பயிற்றுவிப்பாளர் ஆனார்.

ஒலிம்பிக் குத்துச்சண்டை விவரம்:

1972 மியூனிக்: மூன்றாம் சுற்று

சிங்கப்பூரின் ஒலிம்பிக் கட்டமைப்பாக மீடியாகார்ப், தோக்கியோ 2020 போட்டிகளை மிக விரிவாக உங்களுக்கு வழங்கவிருக்கிறது.
மேல்விவரங்களுக்கு mediacorp.sg/tokyo2020 என்ற இணையத்தளத்தை நாடவும்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: