ஒரு மணி நேரத்திற்கு விளக்குகளை அணைக்கும் உலக மக்கள் – என்ன காரணம்

Spread the love

உலக மக்கள் அனைவரும், இன்று ஒரு மணி நேரத்திற்கு விளக்குகளை அணைத்துவைக்க வேண்டுமெனத் தொண்டூழிய அமைப்புகள் பல, வேண்டுகோள் விடுத்துள்ளன.

“Earth Hour” என்னும் பூமி நேரம், மார்ச் 27ஆம் தேதியன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அன்றைய தினம், இரவு 8:30 மணியில் இருந்து இரவு 9:30 மணிவரை வீட்டில் உள்ள விளக்குகளை அணைத்துவைக்க, பொதுமக்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

ஏன் ? எதற்காக ?

நீடித்த நிலைத்தன்மையை ஊக்குவிக்கவும், பருவநிலை மாற்றம் குறித்த அக்கறையைப் பரப்பவும், இயற்கையை நேசிக்கவும் “Earth Hour” அனுசரிக்கப்படுகிறது.

உலக வனவிலங்கு நிதியம் (World Wildlife Fund – WWF) முதன்முதலில் 2007ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இந்த முயற்சியைத் தொடங்கியது.

அப்போது சுமார் 2.2 மில்லியன் பேரிடம், விளக்குகளை அணைத்து வைத்து பருவநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவு தருமாறு WWF கேட்டுக்கொண்டது.

அதன் பிறகு ஆண்டுதோறும் உலகம் முழுவதும் “Earth Hour” கடைப்பிடிக்கப்படுகிறது.

ஐஃபல் (Eiffel) கோபுரம், சிட்னி ஓப்ரா ஹவுஸ் (Sydney Opera House), பக்கிங்ஹாம் அரண்மனை என பல முக்கிய இடங்களும் “Earth Hour” நேரத்தில், விளக்குகளை அணைத்து ஆதரவு தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு நாட்டிலும் உள்ளூர் நேரப்படி இரவு 8:30 மணியில் இருந்து இரவு 9:30 மணி வரை “Earth Hour”அனுசரிக்கப்படுகிறது.   

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *