ஒரு சாம்பியனின் வலியைக் கடத்துகிறதா சாய்னா திரைப்படம்? #Saina | Did Saina movie justifies the pain of the champion

Spread the love


பயோபிக் படங்களின் மிகப்பெரிய சவால் அந்தப் பிரதான கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிகரைத் தேர்வு செய்வதுதான். அதிலும் பயோபிக் எனும்போது, அது மிகப்பெரிய கடினம். அவர்களின் உடல்வாகு, ஆட்ட நுட்பங்கள் என ஒவ்வொன்றையும் பிரதிபலிக்கவேண்டும். தோனி படத்துக்கு சுஷாந்த் போல் ஒருவர் அமைந்தது மிகப்பெரிய விஷயம். ஆனால், சாய்னாவுக்கு அது நடக்கவில்லை. முதலில் ஒப்பந்தமான ஷ்ரத்தா கபூர் விலகியதால், பரினிதி சோப்ரா இந்தக் கதாபாத்திரத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். இரண்டு ஆண்டுகள் இதற்காக கடுமையாக உழைத்திருக்கிறார். ஆனால், அவரால் சாய்னாவை திரையில் கொண்டுவர முடியவில்லை. சாய்னாவை, அவர் வலியை, அவர் ஆட்டத்தை… எதையும் கொண்டுவர முடியவில்லை.

Saina Nehwal | Parineeti Chopra

Saina Nehwal | Parineeti Chopra

சாய்னாவின் மூவ்மென்ட்களை, ஷாட்களை பரினிதியால் வெளிக்கொண்டுவர முடியவில்லை என்பதை படக்குழுவும் உணர்ந்திருக்கிறது. அதிக தாமதிக்காமல் படத்தைத் தொடங்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், டெக்னிக்கல் ஏரியாவில் அதை சரிசெய்ய முடிவு செய்திருக்கிறார்கள். அதனால், பெரும்பாலான பேட்மின்டன் காட்சிகள் குளோஸ் அப் மூலமும், பரினிதியின் தலைக்குப் பின்னால் ஷாட்கள் வைத்தும் சரிசெய்திருக்கிறார்கள். இதன் காரணமாக, பேட்மின்டன் போட்டிகளை அவ்வளவாக ரசிக்க முடியவில்லை. போக, சாய்னாவின் உணர்வுகளையுமே இந்தப் படமோ, பரினிதியோ முழுமையாகக் கடத்தவில்லை. அட, அந்த முகத்தில் இருக்கும் பெரிய மச்சம் கூட சரியாக ஒட்டவில்லை. ‘தமிழ்ப்பட’த்தில் சிவா ஒட்டிக்கொள்ளும் மரு போலத் தனியாகத் தெரிகிறது.THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *