ஒபாமாவின் பாட்டி காலமானார் – TamilSeithi News & Current Affairs

Spread the loveஅமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் பாட்டி, திருவாட்டி சாரா ஒபாமா, காலமாகிவிட்டதாக AFP செய்தி நிறுவனம் தகவல் அளித்துள்ளது.

திருவாட்டி சாரா தம்முடைய 99 வயதில் மேற்கு கென்யாவில் காலமானார். முன்னதாக கிசுமுவிலுள்ள Jaramogi Oginga Odinga மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எளிமையானவரான சாரா, உள்நாட்டுப் பள்ளி உணவகத்தில் கஞ்சி, டோனட் (இனிப்பு வடை போன்ற உணவு) ஆகியவற்றை விற்றவர்.

திரு. பராக் ஒபாமா அதிபர் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு 2018இல் திருவாட்டி சாராவை அவரது கிராமத்தில் சந்திக்கச் சென்றார்.

கிசுமு கிராமத்தில் விமானம் தரையிறங்க இடமில்லாததால் 2015ஆம் ஆண்டிலிருந்து பாட்டியைக் காண முடியாமல் போனதாகத் திரு ஒபாமா, தம் பாட்டியிடம் நகைச்சுவையாகக் கூறியிருந்தார்.

ரத்த சம்பந்தம் இல்லாவிட்டாலும் திரு.பராக் ஒபாமா திருவாட்டி சாராவைப் பாட்டி என்றே அழைத்து வந்தார்.

THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *