ஒசாகா அதிர்ச்சி தோல்வி

Spread the love


சின்சினாட்டி: சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் 3வது சுற்றில் ஜப்பானின் ஒசாகா, ஸ்பெயினின் முகுருஜா தோல்வியடைந்தனர்.

அமெரிக்காவில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகா, சுவிட்சர்லாந்தின் ஜில் டீச்மேன் மோதினர். இதில் ஒசாகா 6–3, 3–6, 3–6 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். ஸ்பெயினின் கார்பைன் முகுருஜா 1–6, 7–6, 2–6 என, செக்குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவாவிடம் வீழ்ந்தார்.

உலகின் ‘நம்பர்–1’ ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி 6–0, 6–2 என்ற நேர் செட் கணக்கில் ‘நடப்பு சாம்பியன்’ பெலாரசின் விக்டோரியா அசரன்காவை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார். மற்ற 3வது சுற்றுப் போட்டிகளில் ஜெர்மனியின் கெர்பர், செக்குடியரசின் கரோலினா பிலிஸ்கோவா, பெட்ரா கிவிட்டோவா, சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக், ஸ்பெயினின் பவுலா படோசா வெற்றி பெற்றனர்.

Advertisement





THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: