ஐ.எஸ்.எல்., போட்டி நேரம் மாற்றம்

Spread the love

புதுடில்லி: ஐ.எஸ்.எல்., கால்பந்து போட்டி துவங்குவதற்கான நேரம் மாற்றப்பட உள்ளது.

அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏ.ஐ.எப்.எப்.,), கால்பந்து விளையாட்டு மேம்பாட்டு நிறுவனம் சார்பில் உள்ளூர் கிளப் அணிகள் பங்கேற்கும் இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) தொடர், 2014 முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதன் 8வது சீசன் வரும் நவ. 19ல் துவங்கவுள்ளது. இதற்கான போட்டிகள், கடந்த சீசன் போல கோவாவில் ரசிகர்கள் இல்லாமல் காலி மைதானத்தில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு மார்ச் வரை நடக்கவுள்ள இத்தொடரில் 11 அணிகள், 115 போட்டிகளில் விளையாட உள்ளன.

 

நேரம் மாற்றம்: வார நாட்களில் ஒரு போட்டியும் (இரவு 7:30 மணி), வார இறுதி நாட்களில் 2 போட்டியும் (மாலை 5:30 மணி, இரவு 7:30 மணி) நடத்தப்படும். இதில் வார இறுதி நாளில் மாலை 5:30 மணிக்கு நடத்தப்படும் முதல் போட்டியை, இரவு 9:30 மணிக்கு நடத்திட முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு வீரர்களும் வரவேற்பு கொடுத்திருப்பதாக தெரிகிறது. தவிர, இத்தொடருக்கான அட்டவணை அடுத்த வாரம் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: