ஐரோப்பாவில் தடுப்பூசி போடும் பணிகள் “ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு” மெதுவாக இடம்பெற்று வருகின்றன

Spread the loveஐரோப்பாவில் தடுப்பூசி போடும் பணிகள் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு மெதுவாக இடம்பெற்று வருவதாக உலகச் சுகாதார நிறுவனம் குறைகூறியுள்ளது.

ஐரோப்பாவில் கிருமித்தொற்றுச் சம்பவங்களின் அதிகரிப்பு கவலை அளிக்கிறது என்றும் நிறுவனம் குறிப்பிட்டது.

தடுப்பூசி போடுவது, கிருமிப்பரவலைத் தடுக்க உதவும்.

ஐரோப்பாவில் தடுப்பூசிப் பணிகள் மெதுவாக இடம்பெறுவதால், கிருமிப்பரவல் சூழலும் நீடிப்பதாக நிறுவனத்தின் ஐரோப்பியக் கிளையின் இயக்குநர் திரு ஹான்ஸ் குளூச் சொன்னார்.

தடுப்பூசி உற்பத்தியை விரைவாக்குவதோடு, தடுப்பூசி போடும் திட்டத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்களையும் குறைக்கவேண்டும் என்றார் அவர்.

தடுப்புமருந்துத் தொகுப்புகளில் உள்ள அனைத்து மருந்தையும் வீணாக்காமல் பயன்படுத்தவேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *