ஐபிஎல் 2021: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் உலகின் நம்பர் ஒன் டி20 பந்துவீச்சாளர் சேர்ப்பு | Rajasthan Royals Sign World No. 1 T20 Bowler Tabraiz Shamsi As Andrew Tye’s Replacement

Spread the love

செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் உலகின் நம்பர் ஒன் டி20 பந்துவீச்சாளர் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் வீரர்களுக்கும், அலுவலர்களுக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, கடந்த மே மாதம் 4-ம் தேதியோடு ஐபிஎல் போட்டிகள் திடீரென நிறுத்தப்பட்டன. இந்நிலையில் 2-வது சுற்று லீக் ஆட்டங்களையும், சூப்பர் லீக் மற்றும் இறுதி ஆட்டத்தையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்தது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் 2-வது கட்ட ஐபிஎல் டி20 லீக் ஆட்டங்கள் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்குகிறது. 27 நாட்கள் நடக்கும் போட்டித் தொடரில் மொத்தம் 31 ஆட்டங்கள் நடக்கின்றன. ஒரே நாளில் இரு ஆட்டங்கள் 7 முறை நடக்கின்றன.

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்துவீச்சாளர் ஆன்ட்ரூ டை 2-வது சீசனில் விலகியதையடுத்து, உலகின் நம்பர் ஒன் டி20 பந்துவீச்சாளர் சேர்க்கப்பட்டுள்ளார்.

தப்ரெஸ் ஷம்ஸி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இந்த ஆண்டு சீசன் மிகவும் மோசமானதாகவே இருந்து வருகிறது. வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகினர். இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டோன் பயோ-பபுள் அச்சம் காரணமாகத் தொடரிலிருந்து விலகினார்.

ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜாஸ் பட்லர், வேகப்பந்துவீச்சாளர் ஆன்ட்ரூ டை ஆகியோரும் தனிப்பட்ட காரணங்களால் விலகினர்.

இந்நிலையில், விக்கெட் கீப்பர் ஜாஸ் பட்லருக்கு பதிலாக கிளென் பிலிப்ஸும், ஆன்ட்ரூ டைக்கு பதிலாக உலகின் டி20 போட்டியின் நம்பர் ஒன் பந்துவீச்சாளரும் தென் ஆப்பிரிக்க வீரருமான தப்ரெய்ஸ் ஷம்ஸி சேர்க்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் அணியில் சுழற்பந்துவீச்சுக்குத் திறமையான வீரர்கள் ஏற்கெனவே உள்ளனர். குறிப்பாக ஸ்ரேயாஸ் கோபால், மயங்க் மார்கன்டே, ராகுல் திவேட்டியா, ரியான் பராக் ஆகியோருடன் தற்போது ஷம்ஸியும் இணைந்துள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டில் ஆர்சிபி அணியில் ஷம்ஸி இடம் பெற்று 4 போட்டிகளில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இடதுகை சுழற்பந்துவீச்சாளரான ஷாம்ஸி, இதுவரை 163 டி20 போட்டிகளில் விளையாடி 183 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் வெளிநாட்டு வீரர்களில் டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ், லிவிங்ஸ்டோன், முஸ்தபிசுர் ரஹ்மான், தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி ஆகியோர் முக்கிய வீரர்களாகக் கருதப்படுகின்றனர்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: