ஐபிஎல் 2021: சன் ரைசர்ஸ் அணியிலிருந்து மிட்ஷெல் மார்ஷ் விலகல்: இங்கிலாந்து அதிரடி வீரர் ஒப்பந்தம் | Sunrisers Hyderabad bring in Jason Roy as Mitchell Marsh’s replacement

Spread the love


சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் மிட்ஷெல் மார்ஷ் தனிப்பட்ட காரணங்களால் 2021 ஐபிஎல் டி-20 சீசனிலிருந்து விலகியுள்ளார் என்று அணி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு பதிலாக இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஜேஸன் ராய் சேர்க்கப்பட்டுள்ளார். ஜேஸன் ராய்க்கு அடிப்படை விலை ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதே விலைக்கு சன்ரைசர்ஸ் அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இம்மாதத் தொடக்கத்தில் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் களமிறங்கிய மிட்ஷெல் மார்ஷ், ஐபிஎல் தொடருக்கு முன்பாக ஒரு வாரம் தனிமைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் மிகவும் கவலை தெரிவித்திருந்த நிலையில் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

2020-ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ஜேஸன் ராய் ஏலத்தில் விடுவிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக டேனியல் சாம்ஸ் எடுக்கப்பட்டார். ஆனால், சமீபத்தில் இந்திய அணிக்கு எதிரான டி20 தொடர், ஒருநாள் தொடரில் ஜேஸன் ராயின் அதிரடி ஆட்டம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. டி20 போட்டியில் 132 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள ஜேஸன் ராய், ஒருநாள் தொடரில் 123 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார்.

சன்ரைசர்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னருடன் சில நேரங்களில் பேர்ஸ்டோ களமிறங்கும் நிலையில் மற்றொரு நல்ல தொடக்க ஆட்டக்காரராக ஜேஸன் ராய் கிடைத்துள்ளார். கடந்த ஆண்டு சீசனில் வார்னருக்குச் சரியான தொடக்க ஆட்டக்காரர் அமையாமல் அடிக்கடி ஜோடியை மாற்றிக்கொண்டே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மிட்ஷெல் மார்ஷ் அடிப்படை விலையாக ரூ.2 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டிருந்தார். அதை விலைக்கு ஜேஸன் ராய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு மிட்ஷெல் மார்ஷ் பங்கேற்க முடியாமல் போனதால், அவருக்கு பதிலாக மே.இ.தீவுகள் ஆல்ரவுண்டர் ஹோல்டர் சேர்க்கப்பட்டார். இந்த முறை ஜேஸன் ராய் சேர்க்கப்பட்டுள்ளார்.

THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *