ஐபிஎல் 2021; கேப்டனை உறுதி செய்யாத டெல்லி கேபிடல்ஸ்: 21-ம் தேதி யுஏஇ புறப்படுகிறது | IPL 2021: Delhi Capitals to leave for UAE on Saturday, no decision yet on captaincy

Spread the love


2021-ம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கு நிலையான கேப்டன் யார் என்பதை உறுதி செய்யாத நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணி வரும் சனிக்கிழமை ஐபிஎல் தொடருக்காக ஐக்கிய அரபு அமீரகம் புறப்படுகிறது.

காயம் காரணமாக ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் அணியிலிருந்து விலகிய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில்தான் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த சீசனின் 2-ம் பாதிக்கு, அணிக்கு ஸ்ரேயாஸ் அய்யர் கேப்டன் பொறுப்பு ஏற்பாரா அல்லது ரிஷப் பந்த் கேப்டன் பொறுப்பைத் தொடர்வாரா என்பது தெரியவில்லை.

டெல்லி கேபிடல்ஸ் அணியின் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஐபிஎல் டி20 தொடரின் 2-வது பகுதிக்காக டெல்லி கேபிடல்ஸ் அணி வரும் 21-ம் தேதி அதிகாலை ஐக்கிய அரபு அமீரகத்துக்குப் புறப்படுகிறது.

டெல்லியிருந்து உள்நாட்டு வீரர்கள், அணி ஊழியர்களுடன் புறப்படுகிறோம். உள்நாட்டு வீரர்கள் ஏற்கெனவே தனிமைப்படுத்துதலில்தான் இருக்கிறார்கள். அங்கு சென்றபின் முறைப்படியான தனிமைப்படுத்துதலும் பயோ- பபுளும் தொடங்கும்.

ஸ்ரேயாஸ் அய்யர் தற்போது உடல் தகுதிப் பயிற்சிக்காக ஐக்கிய அரபு அமீரகத்தில்தான் இருக்கிறார். தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வீரர்கள் நாங்கள் சென்றபின் அவர்களின் சர்வதேசப் போட்டிகள் முடிந்தபின் இணைவார்கள். 2-வது பாதி சீசனுக்கு யார் கேப்டன் என்பது இதுவரை முடிவு செய்யவில்லை.

ரிஷப் பந்த் கேப்டனாகத் தொடர்வாரா அல்லது ஸ்ரேயாஸ் அய்யர் கேப்டன் பொறுப்பை வழக்கம் போல் பார்ப்பாரா எனத் தெரியாது. இதுவரை அணி நிர்வாகம் முடிவு ஏதும் செய்யவில்லை” எனத் தெரிவித்தார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே அணியினர் தனிமைப்படுத்துதலில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் டி20 போட்டியின் 2-வது பாதி செப்டம்பர் 19-ம் தேதி தொடங்குகிறது. மொத்தம் 37 ஆட்டங்கள் நடக்க உள்ளன. ஷார்ஜாவில் 10 ஆட்டங்களும், துபாயில் 13 போட்டிகளும், அபுதாபியில் 8 ஆட்டங்களும் நடக்க உள்ளன. ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்காக 46 பக்க வழிகாட்டி நெறிமுறைகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: