ஐபிஎல் டி20 தொடலிருந்து இங்கிலாந்தின் 3 முக்கிய வீரர்கள் திடீர் விலகல் | Bairstow, Malan, Woakes pull out of IPL with six-day quarantine rule being one of the reasons

Spread the love

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19-ம் தேதி தொடங்க இருக்கும் ஐபிஎல் டி20 போட்டித் தொடரிலிருந்து இங்கிலாந்து அணியைச் சேர்ந்த 3 வீரர்கள் திடீரென விலகுவதாகத் தெரிவித்துள்ளனர்.

சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோ, பஞ்சாப் கிங்ஸ் வீரர் டேவிட் மலான், டெல்லி கேபிடல்ஸ் ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் சொந்தக் காரணங்களுக்காக விலகுவதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் முடிந்தபின், பயோ-பபுள் டிரான்ஸ்பர் முறையில் இரு அணி வீரர்களும் ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார்கள்.

ஆனால், இந்திய அணிக்குள் கரோனா புகுந்ததையடுத்து, வேறு வழியில்லாமல் கடைசி டெஸ்ட் ரத்து செய்யப்பட்டது. இதனால் ஐபிஎல் அணி நிர்வாகங்கள் தங்கள் சொந்த செலவில் வீரர்களை அழைத்துச் செல்ல பிசிசிஐ தெரிவித்தது.

பேர்ஸ்டோ, டேவிட் மலான், கிறிஸ்வோக்ஸ்

அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடருக்காக இங்கிலாந்தில் இருந்துவரும் ஒவ்வொரு வீரரும் 6 நாட்கள் கட்டாயத் தனிமையில் இருந்து அதில் கரோனா இல்லை எனத் தெரிந்தபின்புதான் அணியின் பயோ-பபுள் சூழலுக்குள் செல்ல முடியும் என பிசிசிஐ திடீரென அறிவித்தது.

பிசிசிஐ அமைப்பின் இந்த திடீர் கிடுக்கிப்பிடி உத்தரவால்தான் இங்கிலாந்து வீரர்கள் மூவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளனர்.

பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் நிருபரிடம்கூறுகையில், “செப்டம்பர் 19-ம் தேதி தொடங்க இருக்கும் ஐபிஎல் தொடரிலிருந்து இங்கிலாந்து வீரர்கள் பேர்ஸ்டோ, டேவிட் மலான், வோக்ஸ் விலகியுள்ளார்கள். தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாகத் தெரிவித்தாலும், பிசிசிஐ சார்பில் 6 நாள் தனிமை அவர்களைக் கடுமையாக பாதித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் அணி, கடந்த மாதம் ரிலே மெரிடித்துக்கு பதிலாக ஆஸி. வேகப்பந்துவீச்சாளர் நாதன் எல்லிஸையும், ஹை ரிச்சர்ட்ஸனுக்கு பதிலாக அதில் ரஷித்தையும் சேர்த்தது.

கொல்கத்தா அணி, பாட் கம்மின்ஸுக்கு பதிலாக நியூஸிலாந்து வீரர் டிம் சவுதியைச் சேர்த்துள்ளது. ஆர்சிபி அணி, ஆடம் ஸம்பாவுக்கு பதிலாக இலங்கை வீரர் ஹசரங்காவைச் சேர்த்தது.

கிங்ஸ் பஞ்சாப் அணியில் இடம் பெற்றிருந்த டேவிட் மலானுக்கு பதிலாக தென் ஆப்பிரிக்க வீரர் எய்டன் மார்க்ரம் சேர்க்கப்பட்டுள்ளதாக பஞ்சாப் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்றிருந்த பேர்ஸ்டோ விலகியுள்ளதால் அவருக்கு பதிலாக மாற்று வீரரைத் தேடி வருவதாக சன்ரைசர்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: