ஐபிஎல் டி20 ஃபைனல்; சிஎஸ்கே-கொல்கத்தா மோதல்: புள்ளிவிவரங்கள் சொல்வதென்ன? | Three-time champions Chennai Super Kings aim to continue dominance over Kolkata Knight Riders

Spread the love

துபாயில் இன்று நடக்கும் ஐபிஎல் டி20 போட்டியின் சாம்பியன் பட்டத்துக்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் களம் காண்கின்றன.

லீக் சுற்றில் 10 வெற்றிகளைப் பெற்ற சிஎஸ்கே அணி, முதல் தகுதிச்சுற்றில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வென்று ஃபைனலுக்குத் தகுதி பெற்றுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்ற சிஎஸ்கே அணி அடுத்த 2 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பட்டத்தை வெல்லத் தயாராகியுள்ளது.

அதேசமயம், கடந்த 2014-ம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு கொல்கத்தா அணி முன்னேறியுள்ளது. 7 ஆண்டுகளாக கோப்பையை வெல்ல முடியாத நிலையில் இருக்கும் அந்த அணியின் பஞ்சத்தை இந்த முறை மோர்கன் தலைமை தீர்க்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இரு அணிகள் குறித்த சில முக்கியமான புள்ளிவிவரங்களைக் காணலாம்.

நேருக்கு நேர்:

இரு அணிகளும் ஐபிஎல் போட்டியில் 27 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் 17 போட்டிகளில் சிஎஸ்கே அணியும், 9 போட்டிகளில் கொல்கத்தா அணியும் வென்றுள்ளன.

சராசரி ஸ்கோர்:

இரு அணிகளுக்கு இடையே நடந்த ஆட்டங்களில் சிஎஸ்கே அணி சராசரியாக 158 ரன்கள் சேர்த்துள்ளது. கொல்கத்தா அணி 154 ரன்கள் சேர்த்துள்ளது

ஐபிஎல் ஃபைனல்

ஐபிஎல் ஃபைனலில் இரு அணிகளில் சிஎஸ்கே அணி அதிகபட்சமாக 220 ரன்கள் சேர்த்துள்ளது. கொல்கத்தா அணியின் அதிகபட்சம் 202 ரன்கள்தான். குறைந்தபட்சமாக சிஎஸ்கே அணி 55 ரன்களும், கொல்கத்தா அணி 61 ரன்களும் சேர்த்துள்ளன.

ஃபைனலில் சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்து 6 முறையும், சேஸிங் செய்து 11 முறையும் வென்றுள்ளன. கொல்கத்தா அணி முதலில் பேட் செய்து ஒரு முறையும், சேஸிங் செய்து 8 முறையும் வென்றுள்ளன.

ஐக்கிய அரபு அமீரகம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி 2 முறையும், கொல்கத்தா அணி ஒரு முறையும் வென்றுள்ளன. இதில் துபாய் மைதானத்தில் சிஎஸ்கே ஒரு முறை வென்றுள்ளது.

சிஎஸ்கே-கேகேஆர் அணியில் அதிகபட்ச ரன்கள்

 • சுரேஷ் ரெய்னா (747)
 • தோனி (500)
 • டூப்பிளசிஸ் (351)
 • மெக்கலம் (346)
 • ரஸல் (344)

அதிகபட்ச தனி நபர் ஸ்கோர்

 • ரெய்னா (109)
 • ஹசி (95)
 • டூப்பிளசிஸ் (95)
 • மன்விந்தர் பிஸ்லா (92)
 • மன்விந்தர் பிஸ்லா (82)

அதிக விக்கெட்டுகள்

 • பவன்நெகி (5/22)
 • ஜடேஜா (4/12)
 • என்டினி (4/21)
 • ஆஷிஸ் நெஹ்ரா (4/21)
 • இம்ரான் தாஹிர் (4/27)

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: