ஐபிஎல்-காக ஐந்தாவது டெஸ்ட்டை பலி கொடுத்த இந்தியா… வெளியே போன ரவி சாஸ்திரி, உள்ளே நுழைந்த ஜார்வோ! | why india vs england final test cancelled at the last moment

Spread the love

இதற்கிடையே இந்திய நேரப்படி நள்ளிரவில் இந்திய வீரர்களின் கொரோனா பரிசோதனை நெகட்டிவ் என வந்தது. இதனால் போட்டி திட்டமிட்டபடி நடக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ஐபிஎல் அணிகள் பிசிசிஐ நிர்வாகத்தை நெருக்க ஆரம்பித்தன. ‘’இங்கிலாந்து தொடரில் இருந்து வரும் ஒரு வீரர் மூலம் கொரோனா பரவினாலும் ஐபிஎல் போட்டிகள் மீண்டும் ரத்தாகும்… பல கோடிகளை இழக்க நாங்கள் தயாராகயில்லை’’ என அணிகள் எச்சரிக்க, போட்டியை ரத்து செய்வது என்கிற திட்டவட்டமான முடிவை எடுத்தது பிசிசிஐ. இதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், வருமான ரீதியாக இந்திய கிரிக்கெட் வாரியம் சூப்பர் பவராக இருப்பதால் இறுதியாக ஒப்புக்கொண்டது.

ஜார்வோ 69 (டேனியல் ஜார்விஸ்)

ஜார்வோ 69 (டேனியல் ஜார்விஸ்)

இதன்படி இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதி டெஸ்ட் போட்டி அடுத்த ஆண்டு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உள்ளபடி 2-1 என்கிற நிலையில் ஆட்டம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்ச்சைக்குள்ளாகும் ரவி சாஸ்திரி – ஜார்வோ பிரச்னை!

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் அனுமதி இல்லாமல், பயோபபுள் விதிகளை மீறி ரவி சாஸ்திரி தனது புத்தக வெளியீட்டை லண்டனில் நடத்தியதோடு கோலி உள்பட பலரையும் அந்த நிகழ்ச்சிக்கு அழைத்துப்போனதுதான் கொரோனா பரவலுக்கு காரணம் என்கிறது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். இதற்கு பதிலாக, ”இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முறையான பயோபபுள் அமைப்பை உருவாக்கவில்லை, பார்வையாளர்கள் வீரர்களுடன் நெருங்கும் அளவுக்கு பாதுகாப்பு விதிமுறை மீறல்கள் இருந்தன” எனக் குற்றம்சாட்டியிருக்கிறது பிசிசிஐ. அதற்கு ஆதாரமாக பிராங்க் ஸ்பெஷலிஸ்ட்டான ஜார்வோ மூன்று டெஸ்ட்டுகளிலும் கட்டுப்பாடுகளை மீறி பிட்ச் வரை வந்ததை குறிப்பிட்டிருக்கிறது.

கடைசி டெஸ்ட் ரத்தானதற்கு இருதரப்பிலுமே நடந்த விதிமுறை மீறல்களும், ஐபிஎல் நெருக்கடியும் காரணம் என்பதே உண்மை!

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: