ஐக்கிய நாட்டுப் பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்ற வாய்ப்பு வேண்டும்: தலிபான்

Spread the love


தலிபான் அமைப்பு, ஐக்கிய நாட்டுப் பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றுவதற்கு வாய்ப்பளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

உச்ச நிலைச் சந்திப்பில் கலந்துகொள்ள அனுமதி கோரி, ஐக்கிய நாட்டு நிறுவனத் தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸுக்கு (Antonio Guterres) அந்த அமைப்பு கடிதம் அனுப்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.

கத்தார் தலைநகர் டோஹாவில் உள்ள தலிபான் அமைப்பின் பேச்சாளர் சுஹைல் ஷஹீனை (Suhail Shaheen) ஆப்கானின் நிரந்தரப் பிரதிநிதியாய் நியமித்துள்ளதாகவும் அமைப்பு குறிப்பிட்டது.

தகுதிக் குழு அந்தக் கோரிக்கை குறித்து முடிவெடுக்கும் என்று நிறுவனப் பேச்சாளர் கூறினார்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: