‘எவர் கிவன்’ கப்பலுக்கு GIF வெளியிட்ட கூகுள்! | Google Releases a Graphics Interchange Format for Cargo Ship Ever Given which was ran aground in Suez Canal | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online

Spread the love


Google-Releases-a-Graphics-Interchange-Format-for-Cargo-Ship-Ever-Given-which-was-ran-aground-in-Suez-Canal

உலகின் மிகமுக்கிய தேடுபொறிகளில் ஒன்று கூகுள். அனைத்து இயங்கு தளங்களிலும் பெரும்பகுதியான பயனர்களை தன்வசம் கொண்டுள்ளது. இந்நிலையில் சூயஸ் கால்வாயில் தரை தட்டி நின்ற சரக்கு கப்பலான எவர் கிவன் கப்பலுக்காக பிரத்யேக GIF ஒன்றை வெளியிட்டுள்ளது கூகுள் நிறுவனம். இது தரை தட்டிய கப்பல் மீண்டும் மிதக்க துவங்கியுள்ளது என்பதை குறிக்கும் வகையில் உள்ளது. 

கடந்த செவ்வாய் அன்று இந்த கப்பல் எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாயில் குறுக்கு பக்கமாக சிக்கி இருந்தது. இந்நிலையில் பல நாள் போராட்டத்திற்கு பிறகு அந்த கப்பல் நேற்று மீட்கப்பட்டது. அதன் மூலம் அந்த நீர் வழித்தடத்தில் கப்பல் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. அதனை குறிபிடும் வகையில் இந்த படத்தை வெளியிட்டுள்ளது. 

image

வழக்கமாக கூகுள் நிறுவனம் முக்கிய பிரபலங்களின் பிறந்த நாள், பண்டிகை நாட்கள் மாதிரியான தினங்களை கொண்டாடும் வகையில் டூடூல் வெளியிடும். இந்த முறை எவர் கிவன் கப்பலுக்காக அதை செய்துள்ளது.THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *