எம்மா ரடுகானு புதிய சாம்பியன்: யு.எஸ்., ஓபனில் கலக்கல்

Spread the love

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையரில் பிரிட்டனின் எம்மா ரடுகானு சாம்பியன் பட்டம் வென்றார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், உலகின் ‘நம்பர்–73’ கனடாவின் லேலா பெர்ணான்டஸ் 19, டபிள்யு.டி.ஏ., தரவரிசையில் 150வது இடத்தில் உள்ள பிரிட்டனின் எம்மா ரடுகானு 18, மோதினர். கடந்த 1999க்கு பின், யு.எஸ்., ஓபன் பைனலில் ‘டீன் ஏஜ்’ வீராங்கனைகள் மோதியதால் அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

 

முதல் செட்டை 6–4 எனக் கைப்பற்றிய எம்மா ரடுகானு, 2வது செட்டை 6–3 என தன்வசப்படுத்தினார். ஒரு மணி நேரம், 51 நிமிடம் நீடித்த போட்டியில் எம்மா ரடுகானு 6–4, 6–3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை தட்டிச் சென்றார். 

 

முதல் வீராங்கனை: இதன்மூலம் எம்மா ரடுகானு, தகுதிச் சுற்றின் மூலம் பிரதான சுற்றுக்கு முன்னேறி, கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் வீராங்கனையானார்.

* தவிர, 44 ஆண்டுகளுக்கு பின் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றிய முதல் பிரிட்டன் வீராங்கனையானார். கடைசியாக 1977ல் நடந்த விம்பிள்டனில் பிரிட்டனின் விர்ஜினியா வாட் கோப்பை வென்றிருந்தார்.

* தவிர இவர், ரஷ்யாவின் மரியா ஷரபோவாவுக்கு (2004, விம்பிள்டன், 17 வயது) பின் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை தட்டிச் சென்ற இளம் வீராங்கனையானார்.

* அமெரிக்காவின் செரினா வில்லியம்சிற்கு பின் (2014), யு.எஸ்., ஓபனில் பங்கேற்ற அனைத்து போட்டியிலும் (3 தகுதிச் சுற்று, 7 பிரதான சுற்று) ஒரு செட்டை கூட இழக்காமல் கோப்பை வென்ற வீராங்கனையானார்.

 

ரூ. 18 கோடி பரிசு

யு.எஸ்., ஓபனில் கோப்பை வென்ற பிரிட்டனின் எம்மா ரடுகானுவுக்கு, கோப்பையுடன் ரூ. 18 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. பைனல் வரை சென்ற கனடாவின் லேலா பெர்ணான்டஸ், ரூ. 9 கோடி பரிசுத் தொகை பெற்றார்.

Advertisement

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: