எமிரேட்ஸ் செல்லுமா சென்னை * இன்று மும்பை அணி பயணம்

Spread the love


சென்னை: எமிரேட்ஸ் செல்ல சென்னை அணிக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை.

ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் இந்தியாவில் நடந்தது. 29 போட்டிகள் மட்டும் முடிந்த நிலையில் கொரோனா காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. மீண்டும் செப். 19 முதல் எமிரேட்சில் ஐ.பி.எல்., தொடர உள்ளது. வழக்கம் போல துபாய், அபுதாபி, சார்ஜா என மூன்று மைதானங்களில் போட்டிகள் நடக்கவுள்ளன.

இதற்குத் தயாராகும் விரைவில் எமிரேட்ஸ் செல்லும் வகையில், சென்னை அணி கேப்டன் தோனி, ரெய்னா, உத்தப்பா, ருதுராஜ் உள்ளிட்ட வீரர்கள் சென்னை வந்தனர். இவர்கள் இன்று கிளம்பிச் செல்வர் என நம்பப்பட்டது. ஆனால் தற்போது இது தாமதம் ஆகிறது. சென்னை அணி தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில்,‘‘ஆக. 11ல் எமிரேட்ஸ் செல்ல அனுமதி வந்து விடும் என முதலில் தெரிவித்தனர். ஆனால் இதுவரை எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இன்று வந்து விடும் என எதிர்பார்க்கிறோம்.  இதுகுறித்து தொடர்ந்து இந்திய கிரிக்கெட் போர்டு நிர்வாகிகளிடம் பேசி வருகிறோம். அவர்கள் எமிரேட்சில் ஆலோசித்து வருகின்றனர்,’’ என்றார்.

இதனிடையே மும்பை அணி வீரர்கள் இன்று எமிரேட்ஸ் சென்றடைவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற அணிகளின் நிலைமை குறித்து எதுவும் தெரியவில்லை.

Advertisement





THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: