என்ன ‘வாத்தியாரே’ * இப்படி பண்ணிட்டீங்களே… * ரவி சாஸ்திரி மீது கோபம்

Spread the love

லண்டன்: பாதுகாப்பு வளையத்தை மீறிய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் கோஹ்லியிடம் பி.சி.சி.ஐ., விளக்கம் கேட்டுள்ளது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணியினருக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ‘கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் கூடும் இடங்களுக்கு செல்ல வேண்டாம், பாதுகாப்பு வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றுங்கள்’ என பி.சி.சி.ஐ., செயலர் ஜெய் ஷா ஒவ்வொருவருக்கும் தனித்தனியே கடிதம் அனுப்பினார். இதனை யாரும் கண்டு கொள்ளவில்லை. 

படம் ஞாபகம்

லண்டன் ஓட்டலில் நடந்த தனது புத்தக வெளியீட்டு விழாவில் ரவி சாஸ்திரி பங்கேற்றார். ‛சார்பட்டா பரம்பரை’ படத்தில் வருவது போல குருவுக்கு பணிந்த சிஷ்யனாக  கோஹ்லியும் கலந்து கொண்டார். ஏராளமான விருந்தினர்கள் பங்கேற்றதால் ஆபத்து காத்திருந்தது. பயந்து போல 

 விளைவு… ரவி சாஸ்திரிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த பவுலிங் பயிற்சியாளர் பாரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர், பிசியோதெரபிஸ்ட் நிதின் படேல் உட்பட நால்வரும் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டனர். இதன் காரணமாக செப். 10ல் மான்செஸ்டரில் துவங்கும் ஐந்தாவது டெஸ்டில் இந்திய அணி பயிற்சியாளர்கள் இல்லாமல் களமிறங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி தொடர்பாக இந்திய கிரிக்கெட் போர்டிடம்(பி.சி.சி.ஐ.,) தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி முன் அனுமதி பெறவில்லை. அணியை வாத்தியார் போல இருந்து வழிநடத்த வேண்டிய இவரே விதிமுறையை மீறியது துரதிருஷ்டவசமானது. இவருடன் கோஹ்லியும் சேர்ந்து கொண்டு, ஜெய் ஷா ஆலோசனையை காற்றில் பறக்க விட்டுள்ளனர். இதனால் பி.சி.சி.ஐ., அதிருப்தி அடைந்துள்ளது. ‘எந்த சூழ்நிலையில் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்’ என இருவரிடமும் விளக்கம் கேட்டுள்ளது. அணியின் நிர்வாக மானேஜர் கிரிஷ் டோங்ரே மீதும் நடவடிக்கை பாயலாம். 

இது குறித்து பி.சி.சி.ஐ., அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘‘இரு நாட்டு கிரிக்கெட் போர்டுகள் நடத்திய நிகழ்ச்சி அல்ல. இருவரும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டிடமும்(இ.சி.பி.,) அனுமதி பெறவில்லை. இ.சி.பி., உடன் தொடர்பில் உள்ளோம். இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் நடக்காமல் தொடரை திட்டமிட்டபடி முடிப்பதில் கவனமாக உள்ளோம். ஐ.பி.எல்., ‘டுவென்டி–20’ உலக கோப்பை என அடுத்தடுத்து முக்கிய போட்டிகள் வர உள்ளன. இதனால் வீரர்கள் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது. ரவி சாஸ்திரி உட்பட பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் குணமடைய வேண்டும் என்பதே அனைவரது பிரார்த்தனையாக உள்ளது. உலக கோப்பைக்கான அணியை தேர்வு செய்வதற்கான தேர்வாளர்கள் கூட்டம் இன்று நடக்க உள்ளது. இதில் ரவி சாஸ்திரி விவகாரம் பற்றி விவாதிக்கப்படலாம்,’’ என்றார்.

 

Advertisement

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: