எனக்கு உடல் வலி! தனக்கும், கணவர் சரத்குமாருக்கும் விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை குறித்து மெளனம் கலைத்தார் ராதிகா

Spread the love


செக் மோசடி வழக்கில் நடிகை ராதிகாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் உயர் நீதிமன்றத்தில் அதை எதிர்த்து போராடுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2014ல் ரூ.2.50 கோடியை ரேடியண்ட் நிறுவனத்திடம் இருந்து நடிகர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகாவும் பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்தப் பணத்தை அவர்கள் திரும்பக் கொடுக்காமல் காலதாமதம் செய்து வந்துள்ளனர்.

இதனால், அதிருப்தியடைந்த ரேடியண்ட் நிறுவனம் சென்னையில் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

அதாவது, சரத்குமார் மீது 7 வழக்குகளும், ராதிகா மீது 2 வழக்குகளும் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், இருவருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்து நேற்று முன் தினம் அதிரடி தீர்ப்பளித்தனர்.

பின்னர் அதே நாளில் நீதிமன்றத்தில் ஆஜரான சரத்குமார், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும், அதற்கு அவகாசம் வழங்கும் விதமாக, தீர்ப்பை நிறுத்தி வைக்குமாறு கோரிக்கை வைத்தார்.

அதனை ஏற்று தண்டனையை சென்னை சிறப்பு நீதிமன்றம் நிறுத்தி வைப்பதாக அறிவித்தது.

ஆனால்,கொரோனா தொற்று காரணமாக ராதிகா வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதால் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றும் கூறப்பட்டது.

இதன் காரணமாக, நீதிமன்றத்தில் ஆஜராகாத ராதிகாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இது தொடர்பாக ராதிகா டுவிட்டரில் சற்றுமுன்னர் வெளியிட்ட பதிவில், அனைவரின் அன்பிற்கும் நன்றி, நான் கொரோனாவால் பாதிப்படையவில்லை.

இரண்டாவது தடுப்பூசியை செலுத்தி கொண்ட பிறகு உடல் வலி தான் எனக்கு ஏற்பட்டது.

ஊடகங்களில் என் உடல்நிலை மற்றும் வழக்கு பற்றி குப்பைத்தனமான தகவல்கள் வருகின்றன.

வழக்கை எதிர்த்து நாங்கள் உயர்நீதிமன்றத்தில் போராடுவோம். நான் பணிக்கு திரும்பிவிட்டேன் என பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *