எதிர்காலச் சுகாதார அவசரநிலைகளைச் சமாளிக்க, அனைத்துலக உடன்படிக்கை செய்துகொள்வதை ஆதரிக்கும் பல நாடுகள்

Spread the love


COVID-19 நோய்ப்பரவல் போன்று, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சுகாதார அவசரநிலைகளைச் சமாளிக்க உதவ, அனைத்துலக உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொள்வது குறித்த யோசனைக்கு, 20க்கும் அதிகமான நாடுகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன.

அந்தப் பரிந்துரைக்கு உலகச் சுகாதார அமைப்பு ஆதரவளித்துள்ளது.

அந்த யோசனை, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற G20 உச்சநிலை மாநாட்டில் முன்வைக்கப்பட்டது.

அந்த உடன்படிக்கை தொடர்பான அதிகாரத்துவப் பேச்சுகள் இன்னும் தொடங்கவில்லை.

ஆனால், அந்தப் பரிந்துரைக்கு அதிகாரப்பூர்வ ஆதரவு கிடைத்திருக்கிறது.

அதற்கு ஆதரவளித்த நாடுகளில், இந்தோனேசியா, பிரான்ஸ், ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா, பிரிட்டன் உள்ளிட்டவை அடங்கும்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *