எடப்பாடி பழனிசாமியிடம் மன்னிப்பு கோரினார் திமுகவின் ஆ. ராசா – தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021

Spread the love


எடப்பாடி பழனிசாமியிடம் மன்னிப்பு கோரினார் ஆ. ராசா

பட மூலாதாரம், A raja official facebook page

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியின் தாயார் குறித்து தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தனது பேச்சுக்கு ஆ. ராசா மன்னிப்புக் கோரியுள்ளார்.

சமீபத்தில் தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா பிரசாரக் கூட்டமொன்றில் பேசும்போது, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினையும் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியையும் ஒப்பிட்டுப் பேசினார். அதில் அவர் பயன்படுத்திய சொற்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

“ஜனநாயகத்தைக் காப்பாற்ற சிறையில் இருந்தவர் ஸ்டாலின். மாவட்டப் பிரதிநிதி, பொதுக் குழு, செயற்குழு உறுப்பினர் எனப் படிப்படியாக உயர்ந்து தலைவரானவர். ஆட்சி நிர்வாகத்திலும் எம்.எல்.ஏ., மேயர், உள்ளாட்சித் துறை அமைச்சர், துணை முதல்வர் என உயர்ந்தார். இப்போது முதல்வராகப் போகிறார். அவர் திணிக்கப்பட்டவர் அல்ல. முறைப்படி பெண் பார்த்து, நிச்சயம் செய்து, திருமணம் நடத்தி, சாந்தி முகூர்த்தம் நடத்தி, 300 நாட்கள் கழித்து சுகப் பிரசவத்தில் பிறந்தவர் ஸ்டாலின்.

ஆனால், ஜெயலலிதா இறக்கும்வரை இ.பி.எஸை யாருக்கும் தெரியாது. இவர் ஊர்ந்துபோய் முதல்வரானார். அதிகாரத்தில் இருப்பதால் அவருக்குப் புகழ். ஓராண்டாக கொடுத்த விளம்பரத்தால் பத்திரிகைகள் அவரை மிகப் பெரிய தலைவரைப் போல சித்தரிக்கின்றன. இ.பி.எஸ்ஸுக்கு என்ன தகுதி, தியாகம் இருக்கிறது. பொதுவாழ்வில் அவர் எட்டியிருக்கிற தொலைவு என்ன? ஒன்றும் கிடையாது,” என்று பேசினார் ஆ. ராசா.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: