எச் -1பி விசா தடை காலாவதி: இந்தியர்கள் நிம்மதி| Dinamalar

Spread the love


வாஷிங்டன் :அமெரிக்காவில் ‘எச் – 1பி விசா’ வினியோகத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை காலாவதி ஆகி இருப்பதால் இந்திய தொழில்நுட்ப வல்லுனர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறாமல் அங்கு தங்கி பணியாற்றும் வெளிநாட்டினருக்கு எச் – 1பி விசா வழங்கப்படுகிறது.

இந்த விசாவை இந்தியர்களும் சீன நாட்டினரும் தான் அதிக அளவில் பெற்று பயனடைந்து வருகின்றனர்.கடந்த ஆண்டு கொரோனா நெருக்கடியால் ஏராளமான அமெரிக்க இளைஞர்கள் வேலையை இழந்தனர்.இதையடுத்து அவர்களின் நலனைக் கருத்தில் வைத்து முன்னாள் அதிபரான டொனால்டு டிரம்ப் வெளிநாட்டினருக்கு எச் – 1பி விசாக்களை வினியோக்க தடை விதித்து உத்தரவிட்டார்.

latest tamil news

இந்த உத்தரவு கடந்த டிசம்பரில் காலாவதியாகி இருந்தது. எனினும் அந்த தடையை நீட்டித்து அவர் உத்தரவு பிறப்பித்தார்.கடந்த ஜனவரியில் நாட்டின் புதிய அதிபராக பொறுப்பேற்ற ஜோ பைடன் முன்னாள் அதிபர் டிரம்பின் குடியுரிமை மற்றும் குடிவரவு கொள்கைகள் மோசமாக இருப்பதாகவும் அவை திரும்பப் பெறப்படும் என்றும் உறுதியளித்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினத்துடன் எச் – 1பி விசாவுக்கு இருந்த தடை முடிவுக்கு வந்தது. அந்த தடையை மேலும் நீட்டிக்க விரும்பாத அதிபர் பைடன் அந்த உத்தரவு திரும்பப் பெறப்படுவதாக அறிவித்தார்.இனி வெளிநாட்டு தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு எச் – 1பி விசாக்கள் வழங்கப்படும். தடை நீக்கப்பட்டுள்ளதால் இந்தியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

AdvertisementTHANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *