ஊழியர்களின் கைகளையும் விரல்களையும் பாதுகாக்கப் புதிய இயக்கம்

Spread the love


விபத்துகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஊழியர்களின் கைகளையும் விரல்களையும் பாதுகாக்கவும் புதிய இயக்கம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

‘Safe Hands Campaign’ என்று அது அழைக்கப்படுகிறது.

நிறுவனங்கள், இயந்திரங்களை முறையாகக் கையாள ஊழியர்களுக்குக் கற்றுத்தரவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு, 46 ஊழியர்கள் தங்கள் விரல்களை அல்லது கைகளை இழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இயந்திரங்கள் தொடர்பான 1,700க்கும் அதிகமான விபத்துகளும் பதிவுசெய்யப்பட்டன.

உற்பத்தித்துறையில் நேரும் விபத்துகளில் அது மூன்றில் ஒரு பகுதி.

இயக்கத்தின் அறிமுக நிகழ்ச்சியில் மனிதவள மூத்த துணையமைச்சர் ஸாக்கி முகமது கலந்துகொண்டார்.

ஆபத்தை முன்கூட்டியே அறிவிக்கும் உணர்கருவிகள், ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் கூடுதல் பொருள்கள் ஆகியவற்றை வாங்குவது குறித்து நிறுவனங்கள் பரீசிலிக்கலாம்.

பொருளுக்கோ, ஊழியருக்கோ பாதிப்பு இல்லாவிட்டாலும், அனைத்து விதமான விபத்துகளைப் பற்றியும் தகவல் அளிக்கும் பழக்கத்தை நிறுவனங்கள் பின்பற்றவேண்டும் என்று திரு. ஸாக்கி வலியுறுத்தினார்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: