ஊறுகாய் தினம் – ஊர் ஊராய் ஊறுகாய்

Spread the love

இன்று அமெரிக்கர்கள் தேசிய ஊறுகாய் தினத்தைக் கொண்டாடுகிறார்கள்.

1. அமெரிக்கா – Dill

இருபதாம் நூற்றாண்டிலிருந்து வெள்ளரிக்காயைக் கொண்டு செய்யப்படும் ‘Dill’ ஊறுகாய் அங்கு மிகப் பிரபலம்.

1893இல் Heinz நிறுவனம் அதனை அமெரிக்காவில் அறிமுகம் செய்தது.

ஊறுகாய்க்கென்றே அமெரிக்கர்கள் தனிப்பட்ட நாளை ஒதுக்கி வைத்திருந்தாலும் அவர்கள் மட்டுமே அதனை விரும்பி உண்பதில்லை.

உலகம் முழுவதும் வெவ்வேறு பழங்கள், காய்கறிகள் ஊறுகாய் வடிவில் பதப்படுத்தப்படுகின்றன.

2. இந்தியா: ஊறுகாய்

நம்மில் பலருக்குத் தெரிந்தது மாங்காய் ஊறுகாய். ஆனால் இஞ்சி, காய்கறி, எலுமிச்சை, பச்சை மிளகாய் இப்படிப் பலவற்றைக் கொண்டு ஊறுகாய் தயாரிக்கப்படுகிறது.

இந்தியாவின் எந்தப் பகுதியில் அது செய்யப்பட்டது என்பதைப் பொறுத்து ஊறுகாய் வேறுபடும்.

தென்னிந்தியாவில் நல்லெண்ணெய் கொண்டு செய்யப்படுகிறது.

ஆனால் வட இந்தியாவில் அதில் கடுகு எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.

3. இத்தாலி: Giardiniera

‘Giardiniera’ என்றால் ‘தோட்டத்திலிருந்து’ என்று பொருள்.

அது குடை மிளகாய், முள்ளங்கி, காலிஃபிளவர், ஸுக்கினி (cauliflower, zucchini), வெங்காயம் ஆகிய காய்கறிகளைக் கொண்டு செய்யப்படுகிறது.

சிவப்பு அல்லது வெள்ளை வினிகரில் (vinegar) தாளிதப் பொருள்களுடன் அந்தக் காய்கறிகள் ஊறவைக்கப்படுகின்றன.

4. மொரோக்கோ: L’hamd Markad

L’hamd Markad என்பது மஞ்சள் எலுமிச்சைகளைப் பதப்படுத்தும் முறையாக மொரோக்கோவில் தொடங்கியது.

எலுமிச்சை, அதன் சாறு, தண்ணீர், உப்பு ஆகியவற்றால் செய்யப்படும் அது பின் ஊறுகாயாகவும் பிரபலமானது.

5. ஜப்பான்: Kyuri Zuke

‘Dill’ ஊறுகாய் போல Kyuri Zukeயும் வெள்ளரிக்காயைக் கொண்டு செய்யப்படுகிறது.

ஆனால் அது ஜப்பான் ரக வெள்ளரிக்காய்.

அதனை மெல்லியதாக வெட்டியும் சாப்பிடலாம், குச்சியில் குத்தி முழுமையாகவும் சாப்பிடலாம்.

6. இஸ்ரேல்: Torshi

மத்தியக் கிழக்குப் பகுதிகளில் பிரபலமானது Torshi எனும் ஊறுகாய்.

‘Torsh’ எனப்படும் பாரிசீக வார்த்தையிலிருந்து உருவானது அதன் பெயர்.

‘Torsh’ என்றால் புளிப்பு என்று அர்த்தம்.

Torshi பல காய்கறிகளைக் கொண்டு தயாராகலாம்.

ஆனால் சிவப்பு முள்ளங்கியைக் கொண்டு தயாரிக்கப்படும் Torshiதான் அதிகம் விரும்பப்படுகிறது.

7. தென் கொரியா: Kimchi

இன்று சிங்கப்பூரிலும் பலர் Kimchiயை விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.

முட்டைகோஸால் செய்யப்படும் இவ்வித ஊறுகாய் 18ஆம் நூற்றாண்டிலேயே கொரியாவில் அறிமுகமானதாம்.

அது தென்கொரியாவின் தேசிய உணவாகவும் திகழ்கிறது.

8. ஸ்வீடன்: Pickled Herring

ஸ்வீடனில் பனிக்காலம் நீண்டகாலம் நீடிப்பதால் அங்கு உணவு அதிகம் பதப்படுத்தப்படுகிறது.

Herring எனும் மீனை உப்பு, வினிகர், தாளிப்புப் பொருள் ஆகியவை கலந்து இந்த ஊறுகாய் செய்யப்படுகிறது.

9. ஜெர்மனி: Sauerkraut

Sauerkraut ஜெர்மனியில் பிரபலமாக இருந்தாலும் அது சீனர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

முட்டைகோஸ், தண்ணீர், உப்பு ஆகிவற்றுடன் ஜுனிப்பர் பெரிகளையும் சேர்த்து ஜெர்மனியில் அந்த ஊறுகாய் செய்யப்படுகிறது.

10. ஃபிரான்ஸ்: Cornichon

சிறிய வெள்ளரிக்காயைக் கொண்டு செய்யப்படும் இந்த ஊறுகாயை ‘gherkin’ என்றும் கூறலாம்.

வினிகர், தாளிப்புப் பொருள்கள், சின்ன வெங்காயம், பூண்டு போன்றவற்றைக் கலந்து இந்த ஊறுகாய் செய்யப்படுகிறது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: