ஊடகவியலாளர்களுக்கு சலுகை அட்டை!

Spread the love


ஊடகவியலாளர்களுக்கான சலுகை அட்டை ஒன்று ஊடக அமைச்சால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சலுகை அட்டைக்கு கொழும்பு வர்த்தகர் சமூகம் ஆதரவு வழங்கியுள்ளது.

அத்துடன் இந்த அட்டையை பயன்படுத்தி வரும் பண்டிகைக்காலத்தில் தள்ளுபடி விலையில் பொருட்களை வாங்கலாம் என்றும் ஏப்ரல் 1 முதல் 11 வரை சியான் அவருடு மேளா 2021 கண்காட்சியில், மற்றும் ஏப்ரல் 8 முதல் 10 வரை இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபன வளாகத்தில் நடைபெறும் கண்காட்சியில் 500 கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் ஒரு வருடத்திற்கு அது அமுலில் இருக்கும் என்றும் 7000 ஊடகவியலாளர்களுக்கு அதனை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: