உள்ளூர் மின்சாரச் சேவைகளை நிறுத்தும் Ohm Energy

Spread the love

பொது மின்சாரச் சந்தைத் திட்டத்தின்கீழ் செயல்பட்டுவந்த Ohm Energy நிறுவனம், அதன் உள்ளூர் மின்சாரச் சேவைகளை நிறுத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மின்சாரச் சந்தை நிலவரம் நிலையற்றதாக உள்ளதால், அந்த முடிவை எடுத்ததாக நிறுவனம் தெரிவித்தது.

தனது சேவைகளை நிர்ணயிக்கப்பட்ட மின்சாரக் கட்டணத்தை விடக் குறைவான கட்டணத்தில் அளிப்பது இனி சாத்தியமில்லை என்று Ohm Energy கூறியது.

நிறுவன வாடிக்கையாளர்களின் கணக்குகள் அனைத்தும், இம்மாதம் 20-ஆம் தேதி முதல் SP குழுமத்துக்கு மாற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

வாடிக்கையாளர்களின் கணக்குகளைச் சுமுகமாக மாற்றுவது குறித்து SP குழுமம், எரிசக்திச் சந்தை ஆணையம் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுவதாக நிறுவனம் குறிப்பிட்டது.

வாடிக்கையாளர்களின் மின்சார விநியோகத்தில் தடை ஏதும் ஏற்படாது என்றும் கூறப்பட்டது.

வாடிக்கையாளர்கள், விருப்பப்பட்டால், பொது மின்சாரச் சந்தைத் திட்டத்தின்கீழ் செயல்படும் மற்றொரு நிறுவனத்திற்கு மாறிக்கொள்ளலாம் என்று Ohm Energy நிறுவனம் தெரிவித்தது.

iSwitch நிறுவனமும் அதன் சேவையை நிறுத்துவதாக, நேற்று அறிவித்தது.

பொது மின்சாரச் சந்தைத் திட்டத்தின்கீழ் 12 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

Silvercloud Energy நிறுவனமும் அதன் உள்ளூர் சேவைகளை நிறுத்தவுள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது.

Diamond Electric, Best Electricity ஆகிய நிறுவனங்கள் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்த்துக்கொள்வதை நிறுத்தியுள்ளதாக Reuters செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: